SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனந்தபத்மநாப பெருமாள் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை, வனபோஜனம்

2017-11-27@ 11:16:32

திருக்காட்டுப்பள்ளி: செந்தலை அனந்தபத்மநாப பெருமாள் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை, வனபோஜனம் மற்றும் சகஸ்ர தீப விழா 2 நாட்கள் நடந்தது. திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலை அனந்தபத்மநாப பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் காலை பெருமாள் மற்றும் தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம், புஷ்ப அலங்காரம் நடந்தது. இதைதொடர்ந்து பல்வேறு மலர்கள், துளசி தளத்தாலும் ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. நேற்று சுவாமிக்கு சிறப்பு ஆராதனை, வனபோஜனம் நடந்தது. மாலையில் கோயில் வளாகம் முழுவதும் 1,008 தீபங்கள் ஏற்றப்பட்டு சகஸ்ரதீப வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் பெருமாள், தாயருக்கு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை அனந்தபத்மநாப பெருமாள் கைங்கர்ய சபாவினர் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sabarimala11

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

  • pothumakkal_siramam1

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : பொதுமக்கள் கடும் சிரமம்

  • dubai_hospitalll11

    துபாயில் ஒட்டகத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை

  • Astronauts

    சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்