SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டாளை தரிசனம் செய்தால் திருமண பாக்கியம் உண்டாகும்

2017-11-27@ 07:25:36

பொதுவாக கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் கீர்த்தி உண்டாகும் என்பார்கள். இங்கே ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச்சந்தியில் அருளுகிறாள். எனவே, இந்தத் தாயாரிடம் வேண்டிக்கொள்பவை அனைத்தும் நடக்கும் திருமணமாகாத பெண்கள் துளசி மாலை வாங்கி வந்து ஆண்டாளுக்கு சாத்தி, பின் அதனை வாங்கித் தம் கழுத்தில் அணிந்து கொண்டு, அருகிலிருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வந்து, பிறகு கிணற்றினுள்ளே பார்த்துவிட்டு, மீண்டும் ஆண்டாளிடம் வந்து வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபடுபவர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கப்படுகின்றன. இப்படி பிரார்த்தனை செய்பவர்களுக்கு தடைபட்ட திருமணங்கள் உடனே நடக்கின்றன. ஆண்டாள் சந்நதி அமைந்திருக்கும் அர்த்தமண்டபத்தில் வெள்ளிக்குறடு எனும் ஒரு மண்டபம் உள்ளது.

இம்மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலை 6 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஊஞ்சலில் எழுந்தருள்கிறாள். இந்நேரத்தில் ஆண்டாளை தரிசனம் செய்தாலும் திருமண பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. ஆண்டாள் கோயிலில், அதிகாலையில் நடை திறக்கும் அர்ச்சகர்கள் முதலில், ஆண்டாளை பார்ப்பதில்லை. கதவை திறந்ததும் ஆண்டாளுக்கு வலப்புறத்தில் இருக்கும் கண்ணாடியைப் பார்க்கின்றனர். ஆண்டாள் முதலில் இந்த கண்ணாடியைத்தான் பார்த்துக்கொண்டாள் என்ற ஐதீகத்தின் இப்போதைய நடைமுறை இது. பிறகு ஆண்டாளுக்கு தீபம் ஏற்றப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திரை விலக்கப்பட்ட பிறகுதான் அர்ச்சகர்கள் ஆண்டாளை பார்க்கின்றனர். ஆண்டாளுக்கு திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.

ஒரு கிளியைத் தன் இடக்கையில் ஏந்தியிருக்கிறாள் ஆண்டாள். ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு சுகபிரம்மரிஷியை கிளி ரூபத்தில் அவள் தூது அனுப்பியதாகவும் அவ்வாறு அவர் தூது சென்று வந்ததற்கு என்ன பிரதி உபகாரம் வேண்டும் என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் அவள் கையில் தினமும் தான் இருக்க அருளுமாறு’ கேட்டுக் கொண்டாராம். அவர்தான் இப்படி தினம் தினம் புதுப் புதுக் கிளியாக உருவெடுத்து, ஆண்டாளை மேலும் அலங்கரிக்கிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், ஆண்டாளின் மடியில் சயனித்திருப்பார். அதுபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் ஆடித்திருவிழாவின் 7ம் நாளன்று ரங்கமன்னார் ஆண்டாளின் மடியில் சயனித்திருப்பார். இவ்வூர் கிருஷ்ணன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. தம்பதியரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடியது. தென்காசி-விருதுநகர் ரயில் மார்க்கத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்தும், திருநெல்வேலியிலிருந்தும் செல்லலாம், பேருந்து வசதி உண்டு. கோயில் தொடர்புக்கு: 04563-260254; 9443867345.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sabarimala11

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

 • pothumakkal_siramam1

  வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : பொதுமக்கள் கடும் சிரமம்

 • dubai_hospitalll11

  துபாயில் ஒட்டகத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை

 • Astronauts

  சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

 • 15-12-2017

  15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்