SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமகள் தங்கி தவம் மேற்கொண்ட தலம் திருத்தங்கல்

2017-11-24@ 07:20:51

திருப்பாற்கடலில் ஒருநாள் ஒரு பிரச்னை. ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய, நாராயணின் முப்பெருந் தேவியர்களில் யார் சிறந்தவர் என்று! தானே சிறந்தவள்  என்பதை நிரூபிக்க ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டாள். நேராக பூலோகத்தில் தங்கல் மலையென்றழைக்கப்பட்ட திருத்தங்கலுக்கு வந்து கடுந்தவம்  இயற்றினாள். தேவியின் தவத்தை மெச்சும் சாக்கில், அவளைவிட்டுப் பிரிய இயலாத வேதனையைத் தீர்க்கும் பொருட்டு, பெருமாள் அவள்முன் தோன்றி, ‘‘நீயே  சிறந்தவள்’’ என்று நற்சான்றிதழ் கொடுத்தார். இப்படி திருமகள் தங்கி தவம் மேற்கொண்ட தலமாதலால், இப்பகுதிக்கு திருத்தங்கல் என்ற பெயர்  உண்டானதாகச் சொல்வார்கள்.   

இவ்வாறு திருமகளின் ஏக்கம் போக்கிய பெருமாள் இங்கே நின்ற நாராயணனாகக் காட்சியளிக்கிறார். நயனங்களால் நன்மைகள் கொழிக்க வைக்கும் தாயார்,  அருண கமல மஹாலட்சுமியாக அதாவது செங்கமலத் தாயாராக அற்புத தரிசனம் அருள்கிறாள். பெருமாளுக்கும் திருத்தங்காலப்பன் என்று அழகு தமிழ்ப் பெயர்.  திருமணம், பிள்ளைப் பேறு என்று தம் நியாயமான குறைகளைத் தாயாரிடம் சமர்ப்பித்து அவை நிறைவேறியதும் அதன் நன்றிக் காணிக்கையாக தாயாருக்கு  ஒன்பது கஜப் புடவையை சாத்தி நெகிழ்கிறார்கள் பக்தர்கள்.தென்காசி-விருதுநகர் ரயில் பாதையில் திருத்தங்கல் ரயில் நிலையத்துக்கு அருகேயே இந்தக் கோயில்  அமைந்துள்ளது. மதுரை, சிவகாசியிலிருந்து செல்லலாம், பேருந்துகள் உண்டு. கோயில் தொடர்புக்கு: 9442665443

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-03-2018

  18-03-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • nigersaharafestival

  நைஜர் சஹாரா திருவிழா : நைஜீரியாவில் டுவரேஸ் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்பு

 • RussiaCargoPlane

  ரஷ்ய சரக்கு விமானத்தில் இருந்து தங்க மழை: ஓடுதளத்தில் சிதறிய தங்கம் மற்றும் வைரம்

 • syria_war_evacuated

  சிரியா உள்நாட்டுப் போர் : தொடர் தாக்குதல்களால் கடந்த 24 மணிநேரத்தில் 50,000 பேர் வெளியேற்றம்

 • MarielleFrancodead

  பிரேசிலில் அரசியல்வாதி மேரில்லே பிராங்கோ சுட்டுக்கொலை: ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்