SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாபாவாக வணங்கப்படும் படைவீரர்!

2017-11-23@ 07:15:58

சிக்கிம்

பாபா ஹர்பஜன் சிங் 1946ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ந் தேதி குர்ஜன்வாலா என்ற மாவட்டத்தில் ‘சாத்ரனா’ எனும் கிராமத்தில் (இது தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தார். ராணுவத்தில் சேர்ந்து சேவை புரிய வேண்டும் என்ற வேட்கை கொண்டு அவர் 1966ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ந் தேதி பஞ்சாப் ராணுவத்தில் சேர்ந்தார். 1968ம் ஆண்டில் 23 ராணுவ வீரர்களுடன் இணைந்து கிழக்கு சிக்கிம் ராணுவப் படைப்பிரிவில் பணிபுரிந்து வந்தார். சிக்கிம் - சீன ராணுவ எல்லையில் உள்ள துகுலா (Tukula)விலிருந்து டோங்சுலா (Dongchula)வரை உள்ள எல்லைப் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்து நல்லா (Nulla) என்ற பகுதியில் இறந்து கிடந்தார்.

சக ராணுவ வீரர்கள் அவர் உடலைக் கைப்பற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்கள் சில நாட்கள் கழித்து சக ராணுவ வீரர்களின் கனவில் ஹர்பஜன் வந்தார். தனக்கு ஒரு சமாதி எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி அவருக்கு சமாதி நிர்மாணித்து, அடிக்கடி சென்று மலர் தூவி வணங்கி வந்தார்கள். இதனால் சக வீரர்களுக்குப் பல நன்மைகள் நிகழ்ந்தன. அவரது புகழ் பரவியது. 1982ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ந் தேதி பாபா ஹர்பஜன் ஷ்ரைன் என்ற பெயரில் ஒரு அழகிய ஆலயம் எழுப்பப்பட்டது. ஆலயத்தில் அவரது திருவுருவ சிலையையும் வண்ணப் புகைப்படத்தையும் வைத்து பக்தியுடன் வணங்கினார்கள்.

‘சிக்கிம்’ வரும் சுற்றுலாப் பயணிகள் கேங்டாக்கிலிருந்து 5 மணி நேரம் பயணம் செய்து இந்த இடத்தை வந்தடைந்து ‘பாபா’வை வணங்கி வருகிறார்கள். அப்பகுதி மக்களும் சுற்றுலாப் பயணிகளுமாக தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தருகின்றனர். இந்த அழகான ஆலயத்தின் அருகில் கல்வெட்டுடன் பாரத தேசியக் கொடி எப்போதும் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருப்பது பார்க்க அழகாக இருக்கிறது. சீன எல்லையில் இருப்பதால் இந்த ஆலயத்திற்குச் செல்ல முதலில் ராணுவத்தாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் அட்டை நகலையும், நமது பெயர்களையும் குறிப்பிட்டுக் கொடுத்தால் உடனே அனுமதி கிடைத்துவிடுகிறது. இந்த ஆலயத்தில் பாட்டிலில் ஊற்றப்பட்ட தண்ணீர் பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்தத் தண்ணீரை வீட்டில் உள்ள நோயாளிகளுக்குப் பருகத் தந்தால் எந்தவகை நோயும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. ஆனால் இந்தத் தண்ணீரை நோயாளிகள் 21 நாட்களுக்கு தினமும் பருகவேண்டும் என்றும் அந்த நாட்களில் அவர்கள் சைவ உணவு மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் சொல்கிறார்கள். படை வீரராக இருந்து ‘பாபா’வாக போற்றப்பட்டு ஒருவர் வணங்கப்படுகிறார் என்பது வித்தியாசமான, அபூர்வமான தகவலாகும்.

- அயன்புரம் த. சத்தியநாராயணன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-10-2018

  24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

 • FoamFightScotland

  முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

 • SALTMarchRashtrapti

  ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

 • NagoroJapanVillage

  ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்