SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோயிலில் தங்கத்தேரோட்ட ஆண்டு விழா

2017-11-22@ 10:51:36

நெல்லை: நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோயிலில் உபயதாரர்கள் மூலம் 10.5 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளியில் சுமார் 6 அடி உயரத்தில் கடந்த 2009ம் ஆண்டு அம்பாளுக்கு தங்கத்தேர் செய்யப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி தங்கத்தேர் வெள்ளோட்டம் விடப்பட்டு கோயிலுக்கு வழங்கப்பட்டது. திருவிழாக்கள் உட்பட  முக்கிய நாள்களில் தங்கத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வழிபட்டு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். தங்கத்தேர் செய்யப்பட்டதன் 9ம் ஆண்டு தொடக்க விழா நேற்றிரவு நடந்தது.

இதையொட்டி கோயில் வளாகத்தில் சிறப்பு நாதசுவர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் தங்கத்தேர் கமிட்டி நிர்வாகிகள் சோனா வெங்கடாச்சலம், காசிவிஸ்வநாதன், செல்லையா, சுப்பிரமணியன், காந்திமதி சமேத நெல்லையப்பர் உபயத்திருப்பணி மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்