SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம பயம் நீக்கும் சீதாராம ஆஞ்சநேயர்

2017-11-22@ 07:16:50

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்ய மகா நதிக்கரையின் அருகே அமைந்துள்ளது சீதாராம ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில். இக்கோயில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். தை, மாசி ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் சூரியக்கதிர்கள் கருடாழ்வார்  சன்னதியின் உள்புறம் பட்டு கருவறையின் மூலவரான ராமபிரானை வணங்குவது தனிச்சிறப்பு. இங்கு மூலவரான அனுமன், கருவறையில் 6.5 அடி உயரத்திலும், 4அடி அகலத்திலும் ஆஜானுபாகுவான கம்பீரத் தோற்றத்தில் அழகுற காட்சியளிக்கிறார். ஒரே கல்லில் பிரபையுடன் சேர்த்து அபய ஹஸ்தமும் கடிக ஹஸ்தமும் கதையும் ஸ்ரீசக்கரமும் கொண்டு தெற்கு முகம் நோக்கியுள்ளார். மூலவரான அனுமனின் அருகே ராமபிரான் அருள்புரிகிறார்.

இக்கோயிலில் வடக்கு முகமான குபேர பாகத்தில் நின்று அனுமனைத் தரிசித்தால் கடன் தொல்லை, நோய்கள், நவகிரகத் தோஷங்கள், மனபயம், எமபயம் போன்றவை நீங்கும். வியாபாரம்  அபிவிருத்தியடையும். தடை நீங்கி திருமணம் நடக்கும். கார்த்திகை மாதத்தில் கோயிலை 1008 முறை வலம் வருவோருக்கு வேண்டிய வரம் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத  நம்பிக்கை. இந்தத் திருக்கோயிலில் கிழக்கு நோக்கி சீதா லட்சுமணருடன் ராமர் ஒரு சன்னதியிலும் தெற்கு நோக்கி ஆஞ்சநேயர் ஒரு சன்னதியிலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். அனைத்து நாள்களிலும் அனைத்து பூஜைகளும் நடக்கின்றன. சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடு. புரட்டாசி மற்றும் மார்கழி மாதங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ராமநவமி நாட்களில் கோயில் விழாக்கோலம் காணும்.

முக்கியமாக ராமநவமியின்போது சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்தின்போது திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்கள் கோயிலில் மாலை அணிந்துகொண்டு 3 முறை வலம் வந்தால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை. ஆஞ்சநேயரின் அபய அஸ்த காட்சி வேறு எந்தக் கோயிலிலும் பார்க்க முடியாது. வாரம்தோறும் சனிக்கிழமைகளில் இந்தத் திருக்கோயிலில் தரிசனம் செய்தால் ஆஞ்சநேயரின் அருள் கிடைக்கும். தீய எண்ணங்கள் மறைந்து நல்ல எண்ணங்கள் தோன்றும். மொத்தத்தில் நல்ல எண்ணங்கள் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். மாதம்தோறும் அமாவாசையன்று கோயிலில் சுவாமிக்கு திருமஞ்சனமும் சிறப்பு பூஜைகளும் காலையில் நடக்கின்றன. பின்னர் இரவு 7 மணிக்கு கோபுர தரிசனமும், சுவாமி வீதியுலாவும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்த நன்னாளில் சுவாமி தரிசனம் செய்தால் செல்வம் கூடும் என்பது ஐதீகம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Gujarat2

  குஜராத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் தொடங்கியது : 18ம் தேதி முடிவு தெரியும்

 • 14-12-2017

  14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • 80thNanjingMassacre

  நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

 • parliament_attacs

  நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

 • therthal_ujarath11

  குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்