SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வண்ண சிற்பங்கள் நிறைந்த தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயில்

2017-11-22@ 07:16:15

நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. தென்காசியை ஆண்ட பராக்கிரமபாண்டியன் என்ற மன்னன் காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வழிபட நினைத்தார். மன்னின் குலதெய்வமான முருகப்பெருமான் மன்னனுக்கு சக்திவாய்ந்த அபூர்வ குளிகை ஒன்றை கொடுத்து வான்மார்க்கமாக காசி சென்று வழிபடச்செய்தார். இவ்வாறு காசிக்கு சென்று தினமும் காசி விஸ்வநாதரை வழிபட இயலாததை எண்ணி மன்னன் மனம் வருந்தினான். இறைவன் மன்னனது கனவில் தோன்றி, நான் இருக்கும் இடத்தை நீ காண உனக்கு எறும்புகள் சாரைசாரையாக ஊர்ந்து சென்று வழிகாட்டும் என்று கூறி மறைந்தார். மறுநாள் எறும்பு சாரை சாரையாக செல்லுமிடத்தை மன்னன் அடையாளம் கண்டு அங்கு சிவலிங்கமும் நந்தியும் இருப்தை கண்டு வணங்கினான். அவ்விடத்தில் கோயில் கட்டி கோபுரமும் கட்டி தென்காசி நகரையும் நிர்மாணித்து தென்காசி கண்ட பாண்டியனானான்.

1445ல் பராக்கிரம பாண்டியனால் ராஜகோபுர திருப்பணி துவங்கப்பட்டு 6 ஆண்டுகளுக்குப் பின் பட்டத்துக்கு வந்த பராக்கிரம பாண்டியனின் தம்பி சடையவர்மன் குலசேகர பாண்டியனால் 1505ல் ராஜகோபுரத் திருப்பணி முடிவடைந்தது என்று கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன. உத்திரகாசியில் எழுந்தருளியுள்ள சிவாலயம் ஜீவணமானதாலே தெக்கண காசியாக ஆலயம் ெசய்து தரவேணும் என்று கனவில் தோன்றி அருளிச் செய்தமையாலேயே நித்யசச்சிதானந்த சொரூபியாக விளங்கும் பரம்பொருள் காசி விசுவநாதருக்கு எங்கும் பைம்பொழில் வாவி குளங்குளம், நீரோடைகளும், ஆறுகளும், அருவிகளும், காடுகளும், குன்றுகளும், பொத்தைகளும், மலைகளும் சூழ்ந்த பொதிகை மலைச்சாரல் சித்ரா நதி தீரத்தில் தென்காசிநகர் அமைந்து கிபி.1445ம் ஆண்டு கோயில் கண்டான் மாமன்னன் ஜடிலவர்மன், அரிகேசரி பராக்கிரம பாண்டியன் என்பது பாடல்.

கோயில் தூண், வாசல் கல்தூண் கிழக்கு முகம் கல்வெட்டு ஆகியவைகளில் வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகத்திலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று கூறும் அளவிற்கு வண்ண சிற்பங்கள் கோயிலில் உள்ளன. காசி விசுவநாதர் கோயிலின் திரு ஒலக்க மண்டபத்தில் 8 பெரிய தூண்கள் உள்ளன. இவற்றின் தெற்கு வரிசை தூண்களில் வீரபத்திரன், மன்மதன், மகாவிஷ்ணு, பத்ரகாளியம்மன் சிற்பங்களும், வடக்கு வரிசையில் அகோர வீரபத்திரர், ரதிதேவி, ஊர்த்துவ தாண்டவர், மகா தாண்டவர் ஆகிய சிற்பங்களும் மேல்புறத்தில் பேரழகுடைய தமிழணங்கு சிலைகள் இரண்டும் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தூணுடன் சேர்த்து தனித்தனியாக ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளன.

5 பஞ்சபாண்டவர்கள் சிற்பங்கள், யாழி சிற்பங்கள் நான்கு, துவார பாலகர்கள் இரண்டு சிற்பங்கள், கர்ணன் சிற்பம் ஒன்றும் உள்ளன. இவை அனைத்தும் அதி நுட்ப வேலைபாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.  இக்கோயிலின் காசி தீர்த்தம் வட இந்திய காசியின் தீர்த்தத்திற்கு நிகராக போற்றப்படுகிறது. சுவாமி, அம்பாள் அபிஷேகத்திற்கு இந்த தீர்த்தமே பயன்படுத்தப்படுகிறது. இந்திரன், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி கண்ட முனிவர் வழிபட்ட தலம் இதுவாகும்.  இக்கோயிலின் ராஜகோபுரம் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் சிதைந்தது. தற்போது 1990ம் ஆண்டு 9 நிலைகொண்ட புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டு குடமுழுக்கு பிரமாண்டமாக நடத்தப்பட்டது. நெல்லையில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் கோயில் உள்ளது. கோயில் அருகிலேயே பல தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. நெல்லை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ், ரயில் வசதி உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-10-2018

  24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

 • FoamFightScotland

  முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

 • SALTMarchRashtrapti

  ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

 • NagoroJapanVillage

  ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்