SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆதி திருத்தளிநாதர் கோயிலில் சங்காபிஷேகம்

2017-11-21@ 12:28:39

திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஆதி திருத்தளிநாதர் கோயிலில் சோமவார திங்களை முன்னிட்டு சங்காபிஷேக விழா நடைபெற்றது. குன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்பட்ட கோயில்களில் மிகப் பழமையானதும் தொன்மை வாய்ந்த கோயிலுமான மேலக்கோயில் என அழைக்கப்படுவது ஆதித் திருத்தளிநாதர் கோயில். இங்கு கார்த்திகை முதல் திங்கள் சோமவார திங்களாக கடைபிடிக்கப்பட்டு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. மாலை நெல்லில் சங்குகள் அடுக்கப்பட்டு பால், மற்றும் சந்தனம், குங்குமம் இடப்பட்டு சிவலிங்க வடிவத்தில் சிவாச்சாரியர்களால் சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.

தொடர்ந்து யாகவேள்வி நடைபெற்று மூலவரான சிவனுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், விபூதி, யாகத்தில் வைக்கப்பட்ட புனித கலசநீர் ஆகிய பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். பாஸ்கர் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேள்வி மற்றும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். இவ்விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தனபாண்டியன், வயிரவசுந்தரம், நேமநகர் பிள்ளைமார் உறவின்முறையார்களும் ஆதித்திருத்தளிநாதர் கோயில் பிரதோஷ குழுவினரும் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • boataccident_19dead

    பிரான்சன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி

  • intel_beer_fes

    சர்வதேச பீர் திருவிழா : கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் உடன் 1300 வகையான பீர்கள் விழாவில் அறிமுகம்

  • vintage_transportmuseum11

    விண்டேஜ் ஸ்கூட்டர்கள், கார்கள்,பல்லக்குகள், விமானங்கள் : இந்தியாவின் போக்குவரத்து அருங்காட்சியகம்

  • vietnam_stormpuyal11

    வியட்நாமில் வெப்ப மண்டல புயல் தாக்கியதில் 32 பேர் உயிரிழப்பு ; 20 பேர் மாயம்

  • worldSnailpotti

    இங்கிலாந்தில் நத்தைகளுக்கான உலக சாம்பியன் போட்டி : பொதுமக்கள் கண்டுகளிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்