SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரட் கோவா லட்டு

2017-11-20@ 14:48:25

என்னென்ன தேவை?

கேரட் அல்லது டில்லி கேரட் துருவியது - 2 கப்,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
பொடித்த கோவா - 1/2 கப்,
சர்க்கரை - 1/2 கப் அல்லது தேவைக்கு,
மெல்லியதாக சீவிய பாதாம்,
பிஸ்தா - தலா 2 டேபிள்ஸ்பூன்,
உடைத்த முந்திரி, காய்ந்த திராட்சை - தலா 2 டேபிள்ஸ்பூன்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
அலங்கரிக்க விருப்பமான நட்ஸ் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

நான்ஸ்டிக் கடாயில் நெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி சூடானதும் முந்திரி, காய்ந்த திராட்சையை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். அதே கடாயில் மீதியுள்ள நெய்யை ஊற்றி கேரட்டை வதக்கவும். சிறிது வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி, பொடித்த கோவாவை சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் 5 நிமிடம் வதக்கவும். இதில் சர்க்கரை சேர்த்து வதக்கவும். சர்க்கரை கரைந்து அனைத்தும் சுருண்டு வரும்பொழுது வறுத்த முந்திரி, காய்ந்த திராட்சை கலந்து இறக்கவும். ஆறியதும் லட்டுகளாக பிடித்து பிஸ்தா, பாதாம் சீவலால் அலங்கரித்து பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • honduras_11

    ஹோண்டுராஸ் நாட்டில் தனியார் ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்து

  • kumar_political11

    கர்நாடகாவின், 24வது முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்பு : அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்பு

  • 24-05-2018

    24-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்