SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு

2017-11-20@ 14:38:55

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில் கனகதாசர் ஜெயந்தி விழாவில், தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நூதன வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில், குருபர சங்கம் மற்றும் கனக ஜோதி சேவா சமிதி சார்பில், கனகதாசர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் குருபர் குல தெய்வங்கள் மற்றும் பேலூர், கும்மளாபுரம், குருபரஹள்ளி இல்ல தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டு, பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகள் டொல்லு குணிதா, வீரகாசை குணித, பெண்கள் கும்ப கலசத்துடன், கனகதாசர் பல்லக்கு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது.

அதை தொடர்ந்து, பழைய பஸ் ஸ்டாண்டில் தலைமேல் தேங்காய் உடைத்தல் (பாவடா) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நூதன வழிபாடு செய்தனர். விழா கமிட்டி நிர்வாகிகள் ராமகிருஷ்ணா, ரவீந்திரநாத், மஞ்சுநாத், சிவராஜ் முன்னிலை வகித்தனர். நாகராஜ், லிங்கண்ணா, தொட்டய்யா, நரசிம்மமூர்த்தி, திம்மராஜ், முனிகிருஷ்ணகவுடு,சேகர், சுரேஷ், கேசவா, சிவண்ணா, சுப்பிரமணி உட்பட ஆயிரக்கணக்கான குரும்பர் இன மக்கள் கலந்து கொண்டனர். விழாவில் அன்னதானம் நடைபெற்றது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்