SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரைக்கால் ஸ்ரீ பார்வதீஸ்வரர் அம்பாள் ரிஷப வாகனத்தில் தீர்த்தவாரி

2017-11-17@ 12:52:42

காரைக்கால்: காரைக்கோவில்பத்து ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயில் சார்பில், ஸ்ரீ பார்வதீஸ்வரர் அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, காரைக்கால் அரசலாற்றில் கடைமுக தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காரைக்காலில் வரலாற்று சிறப்புமிக்க தலமாக விளங்குவது காரைக்கால் திருத்தெளிச்சேரி எனும் காரைக்கோவில்பத்து ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயில். வரலாற்று காலத்தில், காரைக்கால் மாவட்டத்தின் உணவு பஞ்சத்தை போக்க, இறைவனே உழவனாக வந்து விளைநிலத்தில் விதை விதைத்தபெருமை இக்கோயிலுக்கு உண்டு. நடப்பாண்டு நேற்று பகல் ஸ்ரீபார்வதீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டு, ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி சமேத ஸ்ரீ சந்திரசேகரசுவாமி ரிஷப வாகனத்தில் காரைக்கால் அரசலாற்றங்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PuyalGaja2

    புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

  • EidEMIladunNabi

    மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

  • SidhaindaVazhkaiGaja

    கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்