SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செந்துறை அருகே சென்னிவனம் சிவ ஆலயத்தில் சிவபுராண முற்றோதல் நிகழ்ச்சி

2017-11-14@ 14:48:24

செந்துறை: செந்துறை அருகே சென்னிவனம் சிவ ஆலயத்தில் சிவபுராண முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அரியலூர் மாவட்டம் சென்னிவனம் கிராமத்தில் அமைந்துள்ள சொர்ணாம்பிகை உடனுறை தீர்க்கபுரிஸ்வரர் ஆலயம் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமாகும்.  இவ்வாலயத்தின் தீர்த்த குளத்தில் நீர் பருகி இறைவனை வழிபட்டால் சித்தபிரமை, தோல்நோய் முதலியன குணமடையும் என்பது தலவரலாறு. அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் குடமுழுக்கு 1958ல் நடைபெற்று சுமார் அறுபது ஆண்டுகளாகிறது.

இந்நிலையில் கிராம பொதுமக்கள் கூடி குடமுழுக்கு விழா நடைபெற வேண்டி சிவபுராண முற்றோதல் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு விருத்தாசலம் கரந்தை திருமறைக்கழகம், அரியலூர் இசை ஞானியார் திருக்கூட்டம், மணி வாசகர் மன்றம் அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள். காலை விடைகொடியேற்றி, சிவபூஜை நடத்தி பின்பு சிவபுராண பாடல்களை பாடி பிரகார சுற்று வந்தனர். பின்பு கைலாயக்காட்சியுடைய இறைவனுக்கும் தீபாராதனை ஏற்றி மலர் அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னிவனம், மேட்டுபாளையம், காவேரிபாளையம், ஆனந்தவாடி, கீழராயம்புரம், மேலராயம்புரம், சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்