SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சித்தூர் நீவாநதி கரையோரம் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் சுமங்கலி பூஜை

2017-11-14@ 14:45:36

சித்தூர்: சித்தூர் நீவாநதி கரையோரம் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் சுமங்கலி பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் கலந்துகொண்டனர். சித்தூர் நீவாநதி கரையோரம் ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கார்த்திகை மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், கார்த்திகை மாத 4வது சோமவாரத்தையொட்டி நேற்று காலை அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சுமங்கலி பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் கலந்துகொண்டு தீபம் ஏற்றி, பூஜை செய்தனர். பின்னர், மாலையில் கல்யாண உற்சவம், 108 தீப உற்சவம், ருத்ராபிஷேகம் நடந்தது. இதில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

  • protestfrance

    எரிபொருள் உயர்வை கண்டித்து பிரான்சில் தீவிரமடைந்த போராட்டம்: 1,700 பேர் கைது!

  • ItalyConcertStampede

    இத்தாலி இரவு விடுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்