SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் கார்த்திகை 4வது சோமவாரம் : 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

2017-11-14@ 14:43:35

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கார்த்திகை மாத 4வது சோமவாரத்தில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் சொர்ணமுகி ஆற்றில் புனிதநீராடினர். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கார்த்திகை மாதத்தின் அனைத்து சோமவாரங்களிலும் சிவனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தெலுங்கு கார்த்திகை மாதத்தின் 4வது சோமவாரமான நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர். இதனால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், இலவச தரிசனத்தில் பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கோயில் வளாகத்தில் பெண்கள் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். இதில், நேற்று காலை முதல் ஸ்ரீகாளஹஸ்தியில் விட்டு விட்டு தூரல் மழை பெய்தது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வந்தனர். கோயில் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அன்னதானம் முதல் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் சித்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சொர்ணமுகி ஆற்றில் இருகரையை தொட்டபடி வெள்ளம் பாய்ந்தோடி செல்கிறது. இதனால் ஐயப்பமாலை அணிந்த பக்தர்கள் உட்பட வெளிஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் சொர்ணமுகி ஆற்றில் புனித நீராடினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்