SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : ரிஷப வாகனத்தில் அம்பாளுக்கு சுவாமி தபசுக் காட்சி

2017-11-14@ 14:42:47

நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் விமரிசையாக நடந்துவரும் ஐப்பசி திருவிழாவில்  ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, அம்பாளுக்கு நேற்று தபசுக் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. திக்கெட்டும் புகழ்சேர்க்கும் நெல்லை சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா தனித்துவமிக்கது.

இதன்படி இந்தாண்டுக்கான ஐப்பசி திருவிழா நெல்லையப்பர்  காந்திமதி அம்பாள் கோயிலில் கடந்த 3ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, வீதியுலா நடந்து வருகிறது. விழாவின் 11ம் திருவிழாவான நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி மண்டபம் சென்றார். இதையடுத்து டவுன் காமாட்சியம்மன் கோயிலில் இருந்து அம்பாளும் அங்கு எழுந்தருளியதும்  நண்பகல் 12.10 மணிக்கு மேல் 12.40 மணிக்குள் ரிஷப வாகனத்தில் அம்பாளுக்கு சுவாமி தபசுக் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.

தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு மாலை மாற்றும் வைபவத்துக்குப் பிறகு சுவாமியை அம்பாள் 3 முறை வலம் வந்தார். இதை நெல்லை மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் தரிசித்தனர். இதையொட்டி சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.
 இதனிடையே, தச்சநல்லூர் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருவிழாவையொட்டி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நேற்று இரவு 8மணிக்கு நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.  

தொடர்ந்து நடந்த திருக்கல்யாண வைபவத்தை பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசித்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. ஏற்பாடுகளை  நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் அருட்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். இதே போல் பாளை திரிபுராந்தீஸ்வரர் கோயில், குறிச்சி சொக்கநாதர் கோயில், கருப்பந்துறை அலியாபதி ஈஸ்வரர் கோயில் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதில் சிவனடியார்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்