SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவில்பட்டி, சாத்தான்குளம், செய்துங்கநல்லூர் கோயில்களில் ஐப்பசி திருக்கல்யாண விழா கோலாகலம்

2017-11-14@ 14:41:47

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் கடந்த 10ம் தேதி தேரோட்டம் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று முடுக்குமீண்டான்பட்டி ஆவுடையப்பன் குடும்பத்தினர் மண்டகபடிதாரர் சார்பில் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜையும், 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் இரவு 7.15 மணிக்கு திருமண கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி, அம்பாள் கோயில் திருமண மண்டபத்திற்கு எழுந்தருளினர்.

இரவு 7.45 மணிக்கு மேளதாளம் முழங்க சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை வழங்கினர். இரவில் சுவாமி யானை வாகனத்தில், அம்பாள் பல்லக்கில் பட்டணபிரவோசம் நடந்தது. கோயில் எதிரே உள்ள பிராமண மகாசபை காயத்ரி மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியராஜன், உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, தலைமை எழுத்தர் ராமலிங்கம், ஜனகல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செய்துங்கநல்லூர்:  தென் சிதம்பரம் என போற்றப்படும் செய்துங்கநல்லூர் சிவகாமி அம்மாள் சமேத பதஞ்சலி வியாக்கரபாதீஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் நடந்தது. காலை 6 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, கணபதி ஹோமம், திருமுறை பாராயணம், நடந்தது. தொடர்ந்து மூலஸ்தான மூர்த்திகளுக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து  அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மதியம் 12 மணிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு திருக்கைலாய சிவ பூத கன வாத்தியங்கள் இசைக்க ஸ்ரீரெங்க ராஜ பெருமாள் கோயில் முன்பிருந்து சீர்வரிசை பொருள்களுடன் மக்கள் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் மெயின் பஜார், வி.கோவில் பத்து வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது.

பின்னர் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் நல்லதவம் செய்த நாச்சியார் சமேத வீரபாண்டீஸ்வரர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் நடந்தது. மாலை 7 மணிக்கு சுவாமி எழுந்தருளி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல், தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 4.30க்கு மேல் 5.30க்குள் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். பின்னர் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடந்தது. தொடர்ந்து திருமண விருந்து வழங்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-02-2018

  18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • policecampchennai

  சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

 • 2018Underwaterphotos

  2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

 • modi_iran_president

  டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

 • mexico_earhquake

  மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்