SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூலவரும், உற்சவரும் ஒரே தோற்றம் கொண்டிருப்பது திருக்கண்ணங்குடியில் அதிசயமானது

2017-11-14@ 08:59:43

திருக்கண்ணங்குடி: திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம் ஆகியவற்றுடன் இந்த திருக்கண்ணங்குடியும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண தலங்களாகத் திகழ்கின்றன. கிருஷ்ணனின் பரம பக்தரான வசிஷ்டர், இந்தத் தலத்தில் வெண்ணெயைக் கைகளால் பிடித்து கிருஷ்ணர் உருவம் செய்து அதையே நாள்தோறும் பூஜித்து வந்தார். தன் உறுதியான பக்தியால் அந்த வெண்ணெய்ச் சிலை உருகாதபடி காத்தார். பலகாலங்கள் இவரது இந்த பூஜை தொடர்வதைக் கண்டு மகிழ்ந்த கிருஷ்ணன், நேரடியாக இத்தலத்துக்கு வந்தான். வசிஷ்டரை சோதிப்பதற்காக, வெண்ணெய்க் கிருஷ்ணனை அப்படியே எடுத்து விழுங்கிவிட்டு ஓட்டம் பிடித்தான். அதுகண்டு திகைத்துப்போன வசிஷ்டர் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார்.

அவரிடம் பிடிபடாமல் ஓடிய கிருஷ்ணனை அந்தப் பகுதியில் தவம் இயற்றிக்கொண்டிருந்த மாமுனிவர்கள் தம் பக்தியால் அப்படியே கட்டிப் போட்டனர். அந்த பக்தி வளையத்திலிருந்து மீள முடியாத கிருஷ்ணன், அவர்கள் விருப்பம் போலவே அங்கேயே சிலையாக நின்றான். பின்னாலேயே ஓடிவந்த வசிஷ்டர் அதுதான் சமயமென்று அவன் கால்களைப் பற்றிக்கொண்டார். அந்த கிருஷ்ணன் இங்கே நிலைத்தபடியால் இந்தத் தலம் திருக்கண்ணங்குடியாயிற்று. நின்ற கோலத்தில் திகழும் லோகநாதப் பெருமாள், கருவறையில் புன்னகை முகிழ்கிறார். இவருக்கு சியாமள மேனிப் பெருமாள் என்றும் ஒரு பெயர் உண்டு. ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக விளங்கும் இவரது பாதத்தை, சற்றே எட்டிப் பார்த்து, பட்டர் காட்டும் ஒளி உதவியுடன் தரிசிக்க முடிகிறது!

இவருக்கு முன்னால் கை கட்டியபடி பவ்யமாக கருடன் காட்சியளிப்பதும் விந்தையானது. வைகுண்டத்தில் திருமால் முன்னால் கருடன் இப்படித்தான் சேவை புரிகிறாராம்! ஏதேனும் பிரச்னை, வழக்கு என்றால் பெருமாளை இங்கு வந்து தியானித்தாலே தீர்வு கிடைத்துவிடும் என்கிறார்கள். சிக்கலான வழக்கு என்றால், பதினொரு புதன்கிழமை பெருமாளுக்கு வில்வ அர்ச்சனை செய்து நிறைவாக சர்க்கரைப் பொங்கல் நிவேதனமும் செய்தால் சுமுகமான தீர்வு கிடைக்கிறது என்கிறார்கள். தாயார் அரவிந்தவல்லி என்ற லோகநாயகி. இவர் சந்நதியில் மூலவரும், உற்சவரும் ஒரே தோற்றம் கொண்டிருப்பது அதிசயமானது.

கல்லால் ஆன மூலவரைப் போலவே உலோகத்தால் ஆன உற்சவரும் அதே கண்கள், மூக்கு, வாய் என்று அச்சு எடுத்தாற்போல அமைந்திருக்கும் தோற்றம் உவகை கொள்ள வைக்கிறது. தாயார் சந்நதியைச் சுற்றிலும் அழகிய நந்தவனம் பசுமை பொங்க துலங்குகிறது. திருவாரூர்நாகப்பட்டின பாதையில் ஆழியூர் என்று ஓர் ஊர் உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கண்ணங்குடி திருக்கோயில். அதாவது திருவாரூரிலிருந்து 12 கி.மீ. திருவாரூரிலிருந்து ஆழியூருக்குப் பேருந்து வசதி உள்ளது. ஆழியூரிலிருந்து கோயிலுக்கு ஆட்டோ அமர்த்திக்கொள்ளலாம். கோயில் தொடர்புக்கு: 04366275769.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Greecemilitarydictatorship

    கிரேக்க நாட்டை ஆளும் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

  • 18-11-2017

    18-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • afg_suicide_dead

    ஆப்கான் நாட்டில் அரசியல் கூட்டத்திற்கு அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் பலி

  • GujaratAfricanSiddhi

    குஜராத்தில் ஆஃப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சித்தி மக்கள்: பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தஞ்சம்

  • Karthikayam

    இன்று கார்த்திகை மாத பிறப்பு : ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்