SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சம்பா ரவை காய்கறி பொங்கல்

2017-11-13@ 13:56:20

என்னென்ன தேவை?

கோதுமை சம்பா ரவை - ¾ கப்,
சிறு பருப்பு - ¼ கப்,  
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - தேவைக்கு,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 2,
நறுக்கிய காய்கறிகள் பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி யாவும் சேர்த்து - 1 கப்,
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,
நெய் - 1 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தலா - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கு, முந்திரிப் பருப்பு - 10.

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் சம்பா ரவை, சிறு பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுக்கவும். காய்கறிகள், பச்சை மிளகாய், இஞ்சி முதலானவற்றை நீளவாக்கில் அல்லது விருப்பமான வடிவில் கீரி அரிந்து வைக்கவும். ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை, முந்திரி தாளித்து வதக்கவும். பின் வெட்டிய காய்கறிகள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி இதில் 3 கப் தண்ணீரும் தேவையான அளவு உப்பும் சேர்க்கவும். மஞ்சள் ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இப்போது வறுத்த ரவை, பாசிப்பருப்பு ஆகியவற்றைக் களைந்து சேர்த்து, நன்கு கிளறி வேக விட்டு இறக்கவும். அதன்மேல் நெய் விட்டு கலந்து படைத்து பரிமாறவும். விருப்பப்பட்டால் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

  • karaneeswarargod

    காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

  • TorontoPedestriansAttack

    கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்