SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்ன சொல்கிறது என் ஜாதகம்?

2017-11-10@ 16:54:02

என் சொந்த இடத்தில் எப்போது வீடு கட்டுவேன்? எனது மகன் ஜாதகம் இணைத்துள்ளேன். அவனுக்கு வயது 35. நல்ல வேலையில் இருக்கிறான். எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் இன்னும் திருமணம் ஆகவில்லை. எனது மகனுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க தகுந்த பரிகாரம் சொல்லுங்கள்.- பத்மா, திருநின்றவூர்.

தங்கள் மகனின் ஜாதகப்படி லக்னாதிபதி சனீஸ்வரன் செவ்வாயுடன் கூடி 8ம் இடத்தில் இருக்கிறார். இது கடுமையான களத்திர தோஷத்தை காட்டுகிறது. பொதுவாக இவ்வகை ஜாதகம் அமையப் பெற்றவர்கள் காலத்தில் செய்யும் திருமணங்கள் நிலைப்பதில்லை. அதனால் தள்ளி போகிறதே என்று வருந்த வேண்டாம். இப்பொழுது நேரம் நன்றாக உள்ளது. அடுத்து வரும் ஒன்றரை ஆண்டுக்குள் திருமணம் நடந்து விடும். குலதெய்வ வழிபாடும், முன்னோர் வழிபாடும் தங்கள் குல முறைப்படி செய்து வாருங்கள். பிரதோஷ நாட்களில் விரதம் இருந்து கீழ்காணும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் ஸ்தோத்திரத்தை சிவன் கோயிலில் தீபம் ஏற்றி, நம்பிக்கையுடன் படித்து வரச் சொல்லுங்கள். இந்த ஸ்தோத்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. திருமணம் தாமதமாவது, அல்லது தம்பதி ஒற்றுமைக்கு அனைவரும் படிக்கலாம்.

‘சாம்ப்பேய கௌரார் தஷரீரகாயை - கர்பூர கௌரார் தஷரீரகாய
தம்மில்லகாயை ச ஜடாதராய நம:ஷிவாயை ச நம:ஷிவாய (1)
கஸ்தூரிகாகுங்குமசர்சிதாயை - சிதாரஜ:புஞ் விசர்சிதாய
க்ருதஸ்மராயை விக்ருதஸ்மராய நம:ஷிவாய ச நம: ஷிவாய (2)
ஜணத்க்வணத்கங்கணனூபுராயை - பாதாப்ஜ ராஜப் பணினூபுராய
ஹேமாங்கதாயை புஜகாங்கதாய நம: ஷிவாய ச நம: ஷிவாய (3)
விஷாலனீலோப்பல்லோசநாயை விகாஸிபங் கேருஹலோசனாய
ஸமேக்ஷணாயை விஷமேக்ஷணாய நம:     ஷிவாயை ச நம: ஷிவாய (4)
மந்தாரமாலாகலிதாலகாயை கபாலமாலாங் கிதகந் தராய
திவ்யாம்பராயை ச திகம்பராய நம: ஷிவாய ச நம: ஷிவாய (5)
அம்போதரஷ்யாமலகுந்தலாயை தடித்ப்ர பாதாம்ரஜடாதராய
நிரீஷ்வராயை நிகிலேஷ்வராய நம: ஷிவாய ச நம: ஷிவாய (6)
ப்ரபஞ்ச்ஸ்ருஷ்ட்யுன்முகலாஸ்யகாயை ஸமஸ்தஸம்ஹாரகதாண்டவாய
ஜகஜ்ஜனந்யை ஜகதேகபித்ரே நம: ஷிவாய ச நம: ஷிவாய (7)
ப்ரதீப்தரத்னோஜ்ஜ்வலகுண்டலாயை ஸ்புரன் ஹாபன்னகபூஷணாய
ஷிவான்விதாயை ச ஷிவான்விதாய நம: ஷிவாயை ச நம: ஷிவாய (8)
ஏதத்படேதஷ்டகமிஷ்டதம் யோ பக்த்யா ஸ மான்யோ புவி தீர்கஜீவீ
ப்ராப்னோதி ஸெளபாக்யமனந்தகாலம் பூய ஸதா தஸ்ய ஸமஸ்தஸித்தி (9)’


இத்துடன் எனது மகள் மற்றும் மருமகன் ஜாதகம் அனுப்பிள்ளேன். இவர்களுக்கு குழந்தை பாக்யம் எப்பொழுது ஏற்படும்? எத்தனை வாரிசுகள் இவர்களுக்கு அமைவார்கள்?- திருமதி.சாவித்திரி, குரோம்பேட்டை.

தாங்கள் அனுப்பிய இரு ஜாதகங்களையும் தீவிரமாக ஆராய்ந்து பார்த்தோம். தங்கள் மருமகனின் ஜாதகப்படி லக்னத்தில் ராகு, 5ல் புத்திரகாரகனான குரு, புதன், சூரியன், சுக்கிரன் மற்றும் சனி. இவற்றில் 5க்குடைய சுக்கிரன் அஸ்தங்கம் ஆனதாலும், புத்திரபாக்யம் தடைபெற்று உள்ளது. லக்னத்தில் ராகு, தங்கள் மகளின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ல் ராகு. இவ்வமைப்பு நாக சாபத்தினால் ஏற்படும் புத்திர தோஷத்தை குறிக்கிறது. இருவரையும் திருச்செந்தூர் சென்று தீர்த்தமாடி, நாழிகிணறில் குளித்து முருகனை தரிசித்து அங்கே ஒருநாள் தங்கியிருந்து வரச் சொல்லவும். ஞாயிறுதோறும் ராகுகாலத்தில் துர்க்கைக்கு 2 தீபம் ஏற்றி வழிபட்டு வர சொல்லுங்கள். குலதெய்வ வழிபாடு தடைப்பட்டிருந்தால் உடனே செய்யவும்.‘

ஸ்ரீ க்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்
பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததா
சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் சபங்கஜம்
இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் 'க்ருஷ்ண மாஸ்ரயே’.


-இந்த சக்திவாய்ந்த சம்மோகன கிருஷ்ண மந்திரத்தை இருவரையும் தினமும் சொல்லி வர சொல்லுங்கள். விரைவில் நல்லது நடக்கும்.

நீண்ட நாட்களாக வீடு கட்ட திட்டம் போட்டு வருகிறேன். இதுவரை அமையவில்லை. இடம் வாங்கி விட்டேன். எப்பொழுது கட்ட முடியும்? ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? - மதுசூதனன், சேலம்.

தங்கள் ஜாதகப்படி ராகு 4ம் இடத்தில் இருப்பது சொந்த வீட்டு முயற்சியில் தடைகளை ஏற்படுத்தும். ஆனால் 4ம் இடத்து அதிபதியான புதன் லக்னத்தில் ஆட்சியில் இருப்பதால் புதனின் தசா அல்லது புக்தியில் தடை விலகும். தங்கள் ஜாதகப்படி செவ்வாய் தசை நடைபெற்று வருகிறது. வருகின்ற ஜனவரி 16 முதல் புதன் புக்தி ஆரம்பமாகிறது. தை பிறந்தவுடன் வீடு கட்ட துவங்கலாம். தடங்கல் இன்றி முடியும். செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு தூபம் ஏற்றி வாருங்கள்.

‘ஷண்முகம் பார்வதீ புத்ரம்
க்ரெளஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்
வந்தே ஸிவாத் மஜம்’


- என்ற முருகனின் துதியை தினமும் சொல்லி வாருங்கள்.

எனது மகனுக்கு களத்திர தோஷம் உள்ளதா? ஏனெனில் திருமணமாகி விவாகரத்தாகி விட்டது. மீண்டும் திருமணம் எப்பொழுது நடக்கும்? திருமணம் விரைவில் நடைபெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - சுலோசணா காமாட்சி, டி.குண்ணத்தூர், மதுரை.

தங்கள் மகன் ஜாதகப்படி லக்னாதிபதி 5ல், லக்னத்தில் ராகு, களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் கேது சந்திரன், 8ல் குரு என அமைந்துள்ளனர். இது களத்திர தோஷமும் மற்றும் ராகு-கேதுவின் சர்ப தோஷமும் நிலவுவதைக் காட்டுகிறது. இவ்வகை ஜாதகம் அமைந்தவர்கள் திருமணம் மற்றும் நண்பர்கள் விஷயத்தில் மிகவும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி மனம் மாறும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒன்பது வியாழக்கிழமைகளில் விநாயகருக்கு அறுகம்புல் சாத்தி வரச் சொல்லுங்கள்.

வெள்ளிக்கிழமை மாலை வேளையில் சுமங்கலிகளுக்கு தங்கள் சக்திக்கு உகந்தவாறு தாம்பூலம் மற்றும் பிற தானங்களைக் கொடுத்து வாருங்கள். தங்கள் மகனின் 36வது வயதிற்குள் திருமணம் நடந்து விடும். இவ்வாறு மணமுடிக்கும் துணையுடன் அனுசரித்து போக வேண்டும். தவறான நண்பர்கள் சேர்க்கையை தவிர்ப்பது நல்லது. கீழ்காணும் நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்) என்ற வாராஹி மாலையின் 31வது பாடலைச் சொல்லி, தினமும் மாலையில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சகல சுப நிகழ்ச்சிகளும் தடையின் நடைபெறும்.  

‘வீற்றிருப்பாள் நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள் கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே’.


- ஸ்ரீவாராஹி உபாசகர் ஜோதிடர் ஸ்ரீனிவாசராமன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-11-2017

  20-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-11-2017

  19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • odingaelectionkenya

  கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

 • serina_wed_photos

  டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

 • Newyork_Fire

  நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்