SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வத்திராயிருப்பு பகுதியில் மழை பெய்ய வேண்டி கோயிலில் சிறப்பு யாகம்

2017-11-10@ 12:43:42

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் வனபேச்சியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
வத்திராயிருப்பு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக பருவமழை, கோடைமழை, புயல் மழை என எந்த மழையும் சரிவர பெய்யாததால், பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள் நிரம்பாமல் உள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்ட கண்மாய்கள் தண்ணீரில்லாத நிலையில் உள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் உள்ள தென்னை மரங்கள் விவசாயிகள் கண்எதிரே கருகிப்போனது. நெல் விவசாயமும் நாளுக்கு நாள் குறைந்தது.

விவசாய தோட்டங்களில் உள்ள பல கிணறுகளில் தண்ணீர் இல்லை. ஒரு சில கிணறுகளில் பற்றாக்குறையான தண்ணீர் உள்ளது. இதிலும் நாளுக்கு நாள் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே செல்கிறது. தற்போது வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ள ஊர்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வெள்ளம் சூழ்ந்து வருகிறது. ஆனால் வத்திராயிருப்பு பகுதியில் மட்டும் பருவமழை பெய்யாமல் காலம் தாழ்த்தி வருவதோடு புயலிலும் மழை பெய்யாமல் இருந்து வருகிறது.

இதனையடுத்து வத்திராயிருப்பு, சேதுநாராயணபுரம், கான்சாபுரம், இராமசாமியாபுரம், கூமாப்பட்டி, கொடிக்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த விவசாயிகள் பிளவக்கல் பெரியாறு அணைப்பகுதியில் உள்ள வனபேச்சியம்மன் கோயிலில் நேற்று மழை வேண்டி சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தினர். பூஜைகளில் வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்