SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூண்டிமாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு

2017-11-10@ 12:43:01

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமான பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு பூண்டி அன்னையின் பக்தர்கள் நோயிலிருந்து சுகம்பெறவும், மனபாரத்திலிருந்து விடுதலை பெறவும், குடும்பத்தில் சமாதானம் நிலவவும், பக்தர்களின் தனிப்பட்ட வேண்டுதல் நிறைவேறவும் பூண்டிமாதா புதுமை இரவு சிறப்பு வழிபாடு 2015ம் டிசம்பர் மாதம் 8ம் தேதி துவங்கப்பட்டு பிரதி மாதம் 8ம் தேதி நடந்து வருகிறது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல் இறையரசு தியான மைய இயக்குனர் அருள்தந்தை விஜய் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 5.1.5 மணிக்கு அருள்பொழிவு திருப்பலி, சிறப்பு ஜெபமாலை தேர்பவனி, சிறப்பு நற்கருணை ஆராதனை, இரவு ஜெபவழிபாடு நடந்தன. இதில் பேராலய அதிபரும் பங்கு தந்தையுமான பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், பூண்டிமாதா தியான மைய இயக்குநர் குழந்தைராஜ், உதவி தந்தைகள் அமலதாஸ், எடிசன்ராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mukesamba_daugfes

    முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

  • glassroof_simla

    இயற்கை காட்சிகளை உள்ளிருந்து ரசிக்க வைக்கும் வகையில் ஷிம்லா-கல்கா வரை கண்ணாடி மேற்கூரை கொண்ட ரயில்!

  • bengulrguysraly

    உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பெங்களூரில் ஓரின சேர்க்கையாளர்கள் பிரைட் பேரணி!

  • Thailandmissuniverse

    தாய்லாந்தில் பிரபஞ்ச அழகிப் போட்டிகளுக்கு முன்னோடியாக ஆடை அலங்காரப் போட்டிகள் : பங்கேற்று அசத்திய அழகிகள்

  • santa_world

    மக்கள் முகங்களில் பளிச்சிடும் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி: கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து உற்சாக கொண்டாட்டம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்