SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலமெல்லாம் காத்து நிற்கும் கல்லுக்குறிக்கி காலபைரவர்

2017-11-10@ 09:48:18

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கல்லுக்குறிக்கியில் இருக்கிறது தமிழக, ஆந்திர, கர்நாடக மக்கள் காவல் தெய்வமாய் வழிபடும் ஆயிரமாண்டு பழமை வாய்ந்த காலபைரவர் கோயில். இக்கோயில், ஆஞ்சநேயர் மலை, பைரவர் மலைக்கு இடையே படதேலாவ் ஏரிக்கரையில் ரம்மியமான சூழலில் அமைந்திருக்கிறது. விஜயநகர மன்னர்கள் கட்டிய இந்த கோயிலை சுற்றிலும் சந்திரசூடேஸ்வரர், வரதராஜப் பெருமாள், ஸ்ரீமத் வெங்கடேஸ்வரர், சித்திவிநாயகர், ஐராவதேஸ்வரர் என்று பிரசித்தி பெற்ற கோயில்கள் சூழ்ந்திருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. நுழைவு வாயிலில் நந்தி வரவேற்க, கருவறையில் இரண்டு காலபைரவர்கள் அருள்பாலிப்பது வியப்பு. கருவறையில் சதுர வடிவில் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக காலபைரவரை  தரிசனம் செய்ய வேண்டும்.

சுயம்பு பைரவர் அக்ரோஷமாக இருப்பதால் அவரது உக்கிரம் தணிக்க பார்வதியும், பரமேஸ்வரனும் உடனிருப்பதாக ஐதீகம். லிங்கவடிவில் இறைவன் பரமேஸ்வரனும்,  பார்வதியும் அருள்பாலிக்கின்றனர். காலபைரவர், சீத்த பைரவர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கும் தனியாக கோயில்கள் உள்ளன. கம்மம்பள்ளி, பச்சிகானப்பள்ளி, ஆலப்பட்டி, நக்கல்பட்டி, நெல்லூர், ெகால்லப்பட்டி என்று நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், காலபைரவரை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ‘‘முற்காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் எங்கு சென்றாலும் சிவனின் அம்சமான காலபைரவரின் மூலமந்திரத்தை ஜெபித்து, எந்தவித பயமும் இல்லாமல் இருப்பார்கள். அதேபோல் போரில் வெற்றி கிடைக்க மன்னர்கள், இக்காலபைரவரை வணங்கி ஆசி பெற்றுச் செல்வது வழக்கம்.

அந்த வகையில் கிருஷ்ணகிரியை ஆண்ட மன்னர்கள் பலர், பைரவரை வழிபட்டு வெற்றிகளை குவித்துள்ளனர். சிறந்த சிவபக்தர்களாக இருந்து, பலமன்னர்கள் முக்தி அடைந்துள்ளனர். அவர்கள் ஆட்சி காலத்தில், 19ம் நூற்றாண்டில் கல்லுக்குறிக்கியில் காலபைரவருக்கு கோயில் கட்டப்பட்டது’’ என்று கல்வெட்டுக் குறிப்பு தெரிவிக்கிறது. சனீஸ்வரனின் குருநாதர் காலபைரவர். காசியில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட சனீஸ்வரன், காவல் தெய்வமான காலபைரவரை எண்ணி, தவம்புரிந்து மெய்ஞானம் பெற்றார் என்று புராணம் கூறுகிறது. பைரவரின் 64 அம்சங்களில் 8 அம்சங்கள் விசேஷமானவை. திரிசூலத்தை ஆயுதமாக கொண்டவர் காலபைரவர். கலையை ஆட்டுவிக்கும் கடவுளாக கருதப்படும் காலபைரவர், பிரம்மனின் தலையை தனது நகத்தால் கிள்ளி எறிந்து திருவிளையாடல் நடத்தியவர். இந்த வகையில் கல்லுக்குறிக்கி காலபைரவரும் மிகவும் அற்புத சக்தி கொண்டவர். அவரை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும்.

நோய்கள் அண்டாது. வறுமை விலகி ஓடும். திருமண பாக்கியம் கைகூடும். புத்திர பாக்கியம் கிடைக்கும். கஷ்டங்கள் கரைந்து போகும். மிக முக்கியமாக எந்தவித துஷ்ட சக்தியும் நம்மை அண்டாது. பயங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தமிழகம், ஆந்திரம், கர்நாடகத்தை சேர்ந்த மக்கள் சாரைசாரையாய் திரண்டு வந்து, காலபைரவரை வழிபட்டு செல்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் சிறப்பு பூஜைகள் செய்து காலபைரவருக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஞாயிறு, திங்கள், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கோயிலில் நடக்கும் சிறப்பு பூஜைகள் பிரசித்தி பெற்றவை. கார்த்திகை மாதத்தில் ஞாயிறு ராகு காலத்திலும் திங்கட்கிழமைகளிலும் பைரவருக்கு நடக்கும் அபிஷேகமும், பூஜைகளும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மொத்தத்தில் காலமெல்லாம் காத்துநிற்கும் கல்லுக்குறிக்கி காலபைரவரை வழிபட்டால் வாழ்வில் ஜெயம் உண்டு, பயம் இல்லை என்பதே வழிபடும்  பக்தர்களின் தாரக மந்திரம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • AmazonSuperMarket

  பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

 • ManholeCoverJapan

  பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

 • PhilippineValcanoErruption

  பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

 • WorldEconomicConference

  ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

 • SWITZERLANDHeavySnow

  சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்