SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாபா ஒரு சர்வ சக்தி வாய்ந்த சமர்த்த சத்குரு

2017-11-09@ 09:43:55

பாபா ஒரு சாதாரண வித்தைகாரர் அல்ல, அவர் ஒரு சமர்த்த சத்குரு. பக்தர்களின் உள்ளங்களில் விசுவாமும் நம்பிக்கையும் நிரம்பி வழிய பாபா சில சமத்காரங்களையோ, வியக்கத்தகும் உத்திகளையோ கையாளுகிறார். நன்றி உணர்ச்சி, பிரேமை, பக்தியாக மாறுகிறது. இவ்வாறு பாபாவின் செயல்பாட்டின் உண்மை நோக்கம் காணப்படுகிறது. கீழ்த்தரமான பற்றுக்களால் உண்டாகும் மாசுக்களையும் அதன் விளைவுகளையும் பக்தர்களின் இதயங்களிலிருந்து போக்கி, தூய்மைப்படுத்தி, படிப்படியாக பக்தர்களின் ஆன்மாக்களை உயர்ந்த, மேன்மேலும் உயர்ந்த, நிலைகளுக்கு நடத்திச் சென்று அவர்கள் இறுதியில் தம்முடனே இரண்டறக் கலந்து விடும்படி செய்கிறார் பாபா. தங்கள் தேவைகள் யாவற்றையும் அளிக்கக் கூடிய வள்ளல் என்ற நோக்கத்துடன் மக்கள் பாபாவை அணுகுகின்றனர். அவர்களது லௌகீக தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே பாபாவிடம் செல்கின்றனர்.

ஆனால் பின்னர் பலர் பாபா ராமன், சிவன் போலவே தங்கள் இஷ்ட தெய்வம் என்றும், தங்கள் முன்னோர்களின் குல தெய்வமே பாபாவாக புதிய உருவில் தோன்றி வையகத்தில் புராதான தெய்வீக பணிகளை நிறைவேற்றுகிறது எனவும், கண்டு கொண்டு விடுகின்றனர். நீங்கள் ஏதோ ஒரு வடிவத்தை மனதில் இருத்திக் கொண்டு, நான் அவ்விதமாக இருப்பேன் என்ற மயக்கத்தில் இருந்து வெளியே வா. நான் எல்லா ஜீவர்களிலும் இருக்கிறேன். இந்த சத்தியத்தை நீங்கள் உணர்ந்த கொண்டபோது நான் ரகசியமாகவும், மறைமுகமாகவும் எங்கிருக்க முடியும்? உங்களுக்கும் எனக்கும் தூரம் என்பது இல்லவே இல்லை. தான தர்மங்களில் பொருளைச் செலவு செய்ய வேண்டும். ஆனால் எதிலும் மிதமிஞ்சி செலவு செய்யகூடாது. உடல் அழியக்கூடியதே. ஆயினும், அது உள்ளவரை செல்வமும் ஒரு அளவுக்கு தேவையே. செல்வமே எல்லாம் என்று எண்ணி அதன் வசப்பட்டு மாறிவிடாதே.

தாராளமாகவும், தர்ம சிந்தனை உள்ளவனாகவும் இரு. ஆனால் மிதமிஞ்சியும், பகட்டாகவும் செலவு செய்யாதே. பக்தன் தான் சாயியோடு ஒன்றியவன் என்ற பாவனையிலேயே குருவை வழிபட வேண்டும். சாயியும் பக்தனைத் தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறான பரஸ்பர சமரசபாவனை இல்லாவிட்டால் எல்லாச் செயல்களும் கேவலம் வெளிவேஷங்களே. அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.  கோணல் சிந்தனைகளும், உடும்புப்பிடியாக பலவற்றைப் பிடித்துக் கொள்ளுகிற தன்மையும் உள்ள மனதை அவரது பாதங்களில் சமர்ப்பித்து அவர் எப்படி செயல்பட நம்மை அனுமதிக்கிராரோ அப்படியே நடக்க விட்டுவிடுங்கள். நடப்பதெல்லாம் அவன் செயல் என்ற எண்ணம் உங்கள் மனதில் உதிக்கட்டும். எதையும் நான்தான் செய்கிறேன் என எண்ணாதீர்கள். இந்த நிலைக்கு நீங்கள் மாறும்போது பாபா உங்கள் கைகளை வலியப் பிடித்துக்கொண்டு செயலாற்றுவதை உணர்வீர்கள்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்