SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண் தொழிலதிபர்! இஸ்லாமிய வாழ்வியல்

2017-11-08@ 14:56:39

ஒரு பெண்....அதுவும் முஸ்லிம் பெண்... பன்னாட்டளவில் வணிகம் செய்யலாமா? அன்னை கதீஜா (ரலி) பெரும் வணிகச் சீமாட்டியாக இருந்தார். அவருடைய வணிகப் பொருட்கள் சிரியா வரை சென்றன. நபி(ஸல்) அவர்கள் தொடக்கத்தில் கதீஜாவுக்காக வணிகம் செய்பவராக இருந்தார். அன்னை கதீஜா போலவே இன்னொரு பெண் தொழில் அதிபர் குறித்தும் இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. கலீஃபா உமர் அவர்களின் ஆட்சிக் காலம். ஹின்த் பின் உத்பா எனும் பெண்மணி உமர் அவர்களிடம் வந்து, “நான் வணிகம் செய்ய விரும்புகிறேன். பண வசதி இல்லை. அரசுக் கருவூலத்திலிருந்து எனக்குக் கொஞ்சம் கடன் தந்து உதவுங்கள்” என்றார்.

பொதுவாகவே முஸ்லிம் சமுதாயத்தில் நிலவும் ஒரு கருத்து என்னவெனில், பெண் என்பவள் வீட்டுப் பொறுப்புகளை மட்டுமே கவனிக்க வேண்டும், வெளியுலக ஈடுபாடுகள் இருக்கக் கூடாது என்பதுதான். இஸ்லாமிய வாழ்வியலும் பெண்களுக்கான முதல் பொறுப்பு குடும்பம்தான் என்றே சொல்கிறது. ஆயினும் வாய்ப்பும் வசதிகளும் தேவைகளும் இருக்குமேயானால் பெண்கள் வணிகத்தில் ஈடுபடுவதற்கோ பொருளீட்டுவதற்கோ மார்க்கம் தடை விதிக்கவில்லை. இந்த விவரம்  அறியாதவர்கள்தாம் பெண்கள் பொருளீட்டக் கூடாது என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். உமர் அவர்கள் அந்தப் பெண்ணின் கடனுதவிக் கோரிக்கையை  ஏற்றுக் கொண்டார். அரசுக் கருவூலத்திலிருந்து நான்காயிரம் திர்ஹம் கடனாகத் தரும்படி உத்தரவிடுகிறார்.

(தாரிகுத் தபரி) கடனுதவி பெற்ற ஹின்த் பின் உத்பா எனும் அந்தப் பெண், ‘வணிகம் செய்ய உள்ளூர் மதீனா மார்க்கெட்டே போதும்... ஒரு பெட்டிக் கடை அல்லது பலகாரக் கடை வைத்துப் பிழைப்பை ஓட்டலாம்’ என்று நினைத்தாரா? ஊஹூம்.... தம் வணிகத்தை மதீனாவுடன் நிறுத்திக் கொள்ளாமல் சிரியா செல்கிறார்... அதாவது பன்னாட்டு வணிகம்...வணிகத்தில் ஈடுபடுகிறார்...பெரும் லாபம் ஈட்டுகிறார். வெற்றிகரமான  பெண் தொழில் அதிபராக மதீனா திரும்புகிறார். அந்தப் பெண்ணின் வளர்ச்சியைக் கண்டு உமர் மனம் மகிழ்ந்து என்ன கூறினார் தெரியுமா? “எனக்கு வசதி இருந்திருந்தால் உங்களுக்கு அளித்த கடன் தொகையை உங்களுக்கே நன்கொடையாக அளித்திருப்பேன்.

ஆனால், அரசுப் பொதுக் கருவூலத்திலிருந்து வழங்கப்பட்ட தொகை. ஆகவே கடனாகத்தான் தர முடிந்தது” என்று கூறி அந்தப் பெண்ணை வரவேற்றார். அது மட்டுமல்ல, உடனடியாக  உமர்(ரலி) அவர்கள் ஓர் அறிவிப்பையும் வெளியிட்டார். “அரசிடமிருந்து கடன் உதவி பெற்று இதுபோல் வணிகம் செய்ய யார் விரும்பினாலும் அவர் என்னிடம் வரட்டும்.”“யார் விரும்பினாலும்” என்பதில் பெண்களும் உட்படுவர். ஆகவே திறமையும் ஆற்றலும் உள்ள பெண் தொழில் முனைவோர் வணிகத்தில் ஈடுபட்டு முன்னேற விரும்பினால் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஆணுக்கு நிகரான உரிமையை இஸ்லாம் பெண்ணுக்கும் அளித்துள்ளது.

இந்த வார சிந்தனை


“ஆண்களுக்கு அவர்கள் சம்பாத்தியத்திற்கு ஏற்ப பங்கு உண்டு. மேலும் பெண்களுக்கு அவர்கள்  சம்பாத்தியத்திற்கு ஏற்ப பங்கு உண்டு.” (குர்ஆன் 4:32)

- சிராஜுல்ஹஸன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kuwait_dust_strom

  குவைத்தில் புழுதி புயலால் செந்நிறத்தில் காட்சியளித்த வானம்...மக்கள் கடும் அவதி!

 • ramnathgreece

  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

 • 18-06-2018

  18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

 • 17-06-2018

  17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramalanchennaifestival

  தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்