SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தீமை திருப்பித் தாக்கும்!

2017-11-04@ 10:57:34

நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்பு கூறுபவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார். ஏனெனில், ‘‘விபச்சாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதை கவர்ந்திட விரும்பாதே’’ என்னும்  கட்டளைகளும், பிற கட்டளைகளும், ‘‘உன் மீது அன்பு கூறுவதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூறுவாயாக’’ என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன. அன்பு அடுத்திருப்பவருக்கு தீங்கிழைக்காது. ஆகவே, அன்பே திருச்சட்டத்தின் நிறைவு. இறுதிக் காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள். உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது. இரவு முடியப் போகிறது. பகல் நெருங்கி உள்ளது.

ஆகவே, இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலன்களை அணிந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காம வெறி, சண்டை சச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள். - (உரோமையர் 13:8-14) காட்டுக்கழுதை சிங்கத்தின் நட்பை விரும்பியது. சிங்கம் அக்கழுதையின் நட்பை விரும்பி ஏற்றுக் கொண்டது. காட்டுக் கழுதை விலங்குகளை வேகமாக ஓடிப்போய் பிடிக்க வேண்டும். சிங்கம் அதைத்தன் வலிமையால் அடித்துக் கொல்ல வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு இசைந்தே இரண்டும் இணைந்து வேட்டையாடின. வேட்டைப் பொருளை சிங்கம் மூன்று பங்குகளாகப் பிரித்தது. முதல் பங்கை தான்  அரசன் என்ற முறையில் எடுத்துக் கொண்டது.

இரண்டாவது பங்கை கூட்டாளி என்ற முறையில் எடுத்துக்கொண்டது. பின்னர் கழுதையை நோக்கி,  ஆருயிர் அன்பனே! நீ என் நண்பன்; மூன்றாம் பங்கை நான் கேட்காமலேயே நீ முழு மனதுடன் கொடுத்து விடுவாய் என்று கருதுகிறேன் என்று சொல்லிக் கொண்டே உறுமியது சிங்கம். அதற்குமேல் அங்கிருந்தால் ஆபத்து என்பதை அறிந்த கழுதை ஓட்டம் பிடித்தது. தன்னைவிட மிகுந்த ஆற்றல் படைத்தவரோடு நட்பு கொள்வதோ, கூட்டு சேர்வதோ, சிறப்புடைய செயல் ஆகாது. அவர்களிடம் தன் உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டியதிருக்கும். உரிமைக்காக வாதாடத் தொடங்கினாலோ தன் உடைமை முழுவதையும் இழக்க நேரிடும். உயிருக்கும்கூட தீங்கு நேரலாம்.‘‘கல்லை மேலே எறிவோர் அதைத்தன் தலை மேலேயே எறிந்து கொள்கின்றனர். நம்பிக்கைக்கேடு எனும் அடி காயங்களைப் புதுப்பிக்கும். குழி தோண்டுவோர் அதிலேயே விழுவர். கண்ணி வைப்போர் அதிலேயே பிடிபடுவர். தீமை செய்வோரைத் தீமை திருப்பித்தாக்கும். அது  எங்கிருந்து வருகிறது என அவர்களுக்கே தெரியாது. - (சீராக் 27:25-27)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • puppies_formation12345

  சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

 • philipines_landslidesaccid

  பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

 • tanzinaship_accid2121

  டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

 • iranshooting_festiv0000

  ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

 • beerfestiv_german123

  ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்