SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயிலாடுதுறை துலா கட்டத்தில் ஐப்பசி கடை முழுக்கு புண்ணிய பலன் தரும்

2017-10-31@ 07:48:40

காவிரிக் கரையில் காசிக்கு நிகரானதாக கருதப்படும் தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்றா கும். இங்குள்ள மாயூரநாதர் கோயில், தொன்மையான சிவஸ்தலம். திருவாவடுதுறை ஆதீனத் திற்குரியது. இறைவி அபயாம்பிகை. இறைவன் மாயூரநாதரை பிரம்ம தேவன் பூஜித்தான். அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரு சிவஸ்தலங்களில் மயி லாடுதுறையும் ஒன்று. சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் இறை வன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்து கொண்டு அவமானப்பட்ட பார் வதியை காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் சபித்து விடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை வெகுகாலம் பூஜை செய்து அம்பிகை சுய உருவம் அடைந்து பாவங்கள் நீங்கப்பட்டு சிவனை அடைந்தாள். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் இத்தலம் மயிலாடுதுறை எனப்பட்டது. இதேபோல் தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தண்டிக்கப்பட்ட தேவர்கள் யாவரும் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு நலன் பெற்றனர் என்கின்றன புராணங்கள்.

கோயில் அமைப்பு:

கிழக்கே 9 நிலைகளுடன் பெரிய கோபுரமும், மற்ற 3 பக்கமும் மொட் டை கோபுரங்களுடனும் கோயில் உள்ளது. ஐந்து பிரகாரங்கள் உள்ளன. ராஜ கோபுரம் வழியாக நுழைந்தவுடன் இடதுபுறம் திருக்குளமும், வலதுபுறம் குமரக் கட்டளை அலுவல கமும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்திற்கு அருகில், ஜுரதே வர், அருகில் ஆலிங்கன மூர்த்தி இருக்கின்றனர். துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரு அசுரர்களும் இருக் கின்றனர்.இங்கு சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்ன தியில் இருக்கின்றனர். பிரகாரத்தில் அஷ்டலட்சுமியும், அதற்கு மேலே சட்டை நாதரும் இருக்கின்றனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு தனியே இருக்கிறார். நாதசர்மா, அன வித்யாம்பிகை தம்பதியருக்கு இறைவன் முக்தி கொடுத்ததன் பொருட்டு அவர்களுக்கு அம்பாள் சன்னதியின் தெற்கே சன்னதி உள்ளது.

மாயூரநாதர் சன்னதியின் வடபுறம் குமரக்கட்டளை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. குமரக்கட்டளை மண்டபத்தில் தென்புறம் பெரியவிநாயகரும், வடபுறம் ஆறுமுகனும் எழுந் தருளியுள்ளனர். வெளிப் பிரகாரம் வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு முகமாக உள்ள கோயி லில் ஆதி மாயூரநாதர் எழுந்தருளியுள்ளார். வடபுறம் உள்ள அம்மன் சன்னதியில் அன்னை அபயாம்பிகை நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன், மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும், வலது திருக்கரத்தில் கிளியை ஏந்தி காட்சி தருகிறாள்.

கடைமுழுக்கு:

ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷம். அங்கு காவிரிக்கு, ரிஷப தீர்த்தம் எனப்பெயர். நந்திதேவருக்கு ஒருசமயம் அகம் பாவம் வந்து விட்டது. அதை அறிந்த சிவபெருமான், நந்திதேவரைப் பாதாளத்தில் அழுத் தினார். அப்படி நந்தி தேவர் அழுத்தப்பட்ட இடம், மயிலாடுதுறை. இது காவிரியின் துலாக் கட்டமாகும். அந்த இடத்தின் நடுவில் இருக்கும் சுவாமியின் திருவடிவை இன்றும் பார்க் கலாம். ரிஷப தேவர் அழுந்திய இடம் ஆதலால், அது ரிஷப தீர்த்தம் என அழைக் கப்படு கிறது. ஐப்பசி மாதத்தில் காவிரியில் கங்காதேவியும் வாசம் செய்கிறாள். தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லெட்சுமி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருகின்றனர்.

ஆகையால் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரி யில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும். ஐப்பசி மாதக் கடைசி நாளில், இங்கே நீராடு வதற்கு ‘கடை முழுக்கு’ என்று பெயர். இந்த நாளில், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் மூர்த்திகளும் காவிரியில் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளுவர். அதனால் துலா ஸ்நானம் பாவம், துன்பம் போக்கி புண்ணிய பலனை அளிக்கும். ஐப்பசி மாதத்தின் முதல் நாள் தொ டங்கி, கார்த்திகை மாதம் முதல் தேதி முடிய இங்கு நீராடுவது, மிகவும் விசேஷம். அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுழுக்கு அன்று நீராடுவது மிக சிறப்பு. இம் மாதத்தில் முதல் 29நாட்களில் நீராட முடியா விட்டலும், கடைசி நாளான 30ம் நாள் காவிரியில் நீராடி மாயூரநாதரையும், அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

முடவன் முழுக்கு:


கார்த்திகை மாதத்தின் முதல் நாள் ‘முடவன் முழுக்கு’ நடைபெறும். துலா நீராடலைக் கேள்விப்பட்டு, தன் பாவத்தை போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் துலா கட்டத்துக்கு ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல்நாள் ஆகி விட்டது. முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால், சிவபெருமான் ‘நீ போய் மூழ்கு! உனக்கும் பேறு கிடைக்கும்’ என்று அருள் செய்தார். அவர் வாக்குப்படியே அவரும் கார்த்திகை மாதம் முதல் நாளன்று புனித நீராடி முக்தி பெற்றார்.

அதுவே ‘முடவன் முழுக்கு’ எனப் படுகிறது. இதே போல் கடைசி நாளில் காவிரியில் நீராட நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியர் மாயூரம் வருவதற்குள் 30ம் நாள் நீராடல் முடிந்து விட்டது. எனவே வருத்தத் துடன் சிவனை வேண்டி தங்கிய நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதி காலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன் படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப் பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல் நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-10-2018

  22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்