SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கார்த்திகை மாதத்தையொட்டி தட்சிணாமூர்த்தி யாகம்

2017-10-27@ 14:22:51

திருமலை: திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கார்த்திகை மாதத்தையொட்டி தட்சிணாமூர்த்தி யாகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முழுவதும் கணபதி, சுப்பிரமணி சுவாமி, தட்சிணாமூர்த்தி உட்பட பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு கார்த்திகை மாதத்தையொட்டி கடந்த 20ம் தேதி கணபதி யாகம் 3 நாட்களாக நடந்தது. தொடர்ந்து, 2 நாட்கள் சுப்பிரமணிய சுவாமி யாகமும், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணமும் நடந்தது. இந்நிலையில், நேற்று நவக்கிரகங்களில் குருவாக கருதப்படும் தட்சிணாமூர்த்தி யாகம் நடந்தது. முன்னதாக கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக மண்டபத்தில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து, தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, யாகம் நடந்தது. இதில், பக்தர்கள் 500 கட்டணம் செலுத்தி கலந்து கொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kabul_terror_43

    காபுலில் சொகுசு ஓட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

  • Christiansmanila

    மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

  • 22-01-2018

    22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-01-2018

    21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்