SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பெண் சமூக உறுப்பினரும் கூட !

2017-10-25@ 08:01:44

“பெண் ஒரு குடும்ப உறுப்பினர் மட்டும்தான்....அவள் தன் குடும்பத்தின் தேவைகளை மட்டும் கவனித்தால் போதும்’’என்பது கற்றறிந்த அறிஞர்கள் உட்பட பலரின் எண்ணம். அத்தகைய எண்ணத்திலிருந்து கொஞ்சமும் நகர்ந்துவிடக் கூடாது என்று பெரிய சுவர் எழுப்பியுள்ளனர். ஆனால், இவர்கள் சொல்வதுபோல் இஸ்லாமிய வாழ்வியல் குறுகிய சுவருக்குள் இல்லை. பெண்ணைக் குடும்ப உறுப்பினராகப் பார்க்கும் இஸ்லாம் அவளை ஒரு சமூக உறுப்பினராகப் பார்க்கவும் தவறவில்லை. ஆண்களுக்கு மட்டுமே உரிய  சமுதாயப் பொறுப்புகள்  என்று நாம் கருதும் விவகாரங்களில்கூட பெண்ணுக்கும் சமபங்கு இருப்பதாகக் குர்ஆன் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.இறைவன் கூறுகிறான்:“இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றனர். அவர்கள் நன்மை புரியுமாறு ஏவுகிறார்கள்.தீமையிலிருந்து தடுக்கிறார்கள்.

மேலும் தொழுகையை நிலைநாட்டுகிறார்கள். ஜகாத்தும் கொடுக்கிறார்கள்.  இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்கள். அத்தகையோர் மீதுதான் இறைவனின் கருணை பொழிந்து கொண்டிருக்கும். திண்ணமாக இறைவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.” (குர்ஆன் 9:71) இந்த வசனம் தொடர்பாக உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் டாக்டர் யூசுபுல் கர்ளாவி “இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்” எனும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்: இந்த வசனத்தில் ஈமான் இறைநம்பிக்கை கொண்டவர்கள் என்று இறைவன் பொதுப்படையாகக் குறிப்பிடவில்லை. மாறாக ஈமான் கொண்ட  ஆண்கள், ஈமான் கொண்ட பெண்கள் என இரு சாராரையும் தனித்தனியாகக் குறிப்பிடுகிறான்.

அவ்வாறு குறிப்பிட்டு நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் சமுதாயப் பொறுப்பில் இரு சாராருக்கும் சம பங்கு உண்டு  என்பதையும் இறைவன் வலியுறுத்துகிறான். திருக்குர்ஆன் பொதுவாக இறைநம்பிக்கை கொண்டவர்களே என ஆண், பெண் இரு சாராரையும் ஒன்றாகவே விளிக்கிறது. அவ்வாறு குர்ஆன் அழைப்பதை நபித்தோழர்கள் ஆண்களுக்கான அழைப்பாக மட்டும் கருதவில்லை. பெண்களும் அந்த அழைப்புக்கு உட்பட்டிருப்பதாகவே கருதினார்கள்.
உம்மு ஸலமா எனும் பெண் வீட்டில் இருக்கும்போது, “மனிதர்களே...” என்று நபியவர்கள் அழைத்துப் பேசும் சத்தம் கேட்டது. உடனே உம்மு ஸலமா எழுந்து செல்ல நின்றார். பக்கத்திலிருந்த பெண், “மனிதர்களே என்றுதானே நபியவர்கள் அழைத்தார்கள்? நீங்கள் ஏன் போகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு உம்மு ஸலமா நானும் மனிதர்களில் ஒருத்திதான்” என்றார். மனிதர்களே என்ற அழைப்பைக் கேட்டு அன்றைய பெண்கள் எழுந்து சென்றனர். பெண்களே எனும் அழைப்பைக் கேட்டாலும் இன்றைய ஆண்கள் அவர்களை எழுந்துசெல்ல விடுவதில்லை.”

இந்த வார சிந்தனை

“உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன். அவர்கள் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி.”(குர்ஆன் 3:195)

 சிராஜுல்ஹஸன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
 • autumnfestivalchina

  சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

 • drumpsusma

  நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

 • rahulgandhiamedi

  உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

 • usstromattack

  ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

 • pandathirtysix

  36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்