SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அன்பையே ஆர்வமாக நாடுவோம்

2017-10-24@ 12:12:40

மதிப்பிற்குரிய இனம் எது? மனித இனம். மதிப்பிற்குரிய இனம் எது? ஆண்டவருக்கு அஞ்சும் இனம். மதிக்கத்தகாத இனம் எது? கட்டளைகளை மீறும் இனம். உடன்பிறந்தாருள் மூத்தவர் மதிப்பிற்குரியவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோர் அவர் முன்னிலையில் மதிப்புப் பெறுவர். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஏற்பின் தொடக்கம்; பிடிவாதமும், ஆணவமும் புறக்கணிப்பின் தொடக்கம். செல்வர், மாண்புமிக்கோர், வறியவர் ஆகிய எல்லோர்க்கும் உண்மையான பெருமை ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே! அறிவுக்கூர்மை படைத்த ஏழைகளை இழிவுபடுத்தல் முறையன்று. பாவிகளை பெருமைப்படுத்துவதும் சரியன்று. பெரியார்கள், நடுவர்கள், ஆட்சியாளர்கள் ஆகியோர் பெருமை பெறுவர். ஆண்டவருக்கு அஞ்சுவோரைவிட இவர்களுள் யாருமே பெரியவர் அல்லர். ஞானமுள்ள அடிமைக்கு உரிமை குடிமக்கள் பணிபுரிவார்கள். இது கண்டு அறிவாற்றல் நிறைந்தவர்கள் முறையிட மாட்டார்கள்.  (சீராக் 10:1925)

ஓர் அடர்ந்த காட்டின் வழியாக மாவீரன் அலெக்ஸாண்டரும், மாமேதை அரிஸ்டாட்டிலும் பேசிக்கொண்டே சென்றுகொண்டிருந்தனர். மாணவனான அலெக்ஸாண்டர் முன்னே நடக்க, அரிஸ்டாட்டில் அவர் பின்னே நடந்து வந்துகொண்டிருந்தார். நடந்துசென்று கொண்டிருக்கையில், ‘‘ஆசிரியருக்குமுன் மாணவன் நடக்கலாமா?’’ என்று அரிஸ்டாட்டில் ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு மாணவனான அலெக்ஸாண்டர், ‘‘நாம் செல்லும் வழியில் நாம் ஓர் ஆற்றைக் கடந்தாக வேண்டும்.’’ அந்த ஆற்றின் ஆழம் எவ்வளவென்று எனக்குத்தான் தெரியும். ஆகவே, நான்தான் உங்களுக்கு முன்னே நடக்கிறேன். ஒருவேளை நான் அந்த ஆற்றில் அமிழ்ந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் உங்களுக்கு முன்னால் நடக்கிறேன் என்று தாழ்மையுடன் சொன்னான்.

ஒரு அரிஸ்டாட்டில் நினைத்தால் ஆயிரம் ஆயிரம் அலெக்ஸாண்டர்களை உருவாக்கலாம். ஆனால், என்னைப்போன்ற ஓராயிரம் அலெக்ஸாண்டர்கள் சேர்ந்தாலும், ஓர் அரிஸ்டாட்டிலை ஒருபோதும் உருவாக்கவே முடியாது என்று மேலும் அடக்கத்தோடு பதில் கூறினான், அந்தப் பணிவான மாணவன். இதைச்சற்றும் எதிர்பாராத அரிஸ்டாட்டில் திகைத்துப் போனார்.‘‘அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும். பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது;

தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். அன்பு ஒருபோதும் அழியாது. ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது. நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோகும்.’’ (1 கொரிந்தியர் 13:410) அன்பு செலுத்த முயலுங்கள். அன்பு நமக்குள் இல்லையேல் நாம் ஒன்றும் இல்லை. அன்பு நமக்குள் இல்லையேல் பயன் ஒன்றும் இல்லை. எனவே, மேலான அருட்கொடையான அன்பையே ஆர்வமாக நாடுவோம்!

‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • puppies_formation12345

  சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

 • philipines_landslidesaccid

  பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

 • tanzinaship_accid2121

  டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

 • iranshooting_festiv0000

  ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

 • beerfestiv_german123

  ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்