SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கந்த சஷ்டி விழா : யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு

2017-10-23@ 10:54:00

அலங்காநல்லூர்: ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்டம், அழகர்மலை உச்சியில் பிரசித்திபெற்ற ஆறாவது படை வீடு எனும் சோலைமலை முருகன் கோயில் உள்ளது. இங்கு கந்த சஷ்டி பெருந்திருவிழா கடந்த 20ம் தேதி தொடங்கியது. அன்று முதல் அன்னம், காமதேனு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. 22ம் தேதியான நேற்று 3ம் திருவிழா நடந்தது. வழக்கம்போல் காலையில் யாகசாலை பூஜைகளும், மஹா அபிஷேகமும், தீபாரதனையும் சுவாமிக்கு நடந்தது.

தொடர்ந்து மேளதாளம் செண்டைமேளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பல்லக்கில் யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி நான்கு பிரகாரங்களில் வலம் வந்து, பின்பு சஷ்டி மண்டபத்தில் இருப்பிடம் சேர்ந்தார். ஏராளமான பக்தர்கள் குவிந்து முருக பெருமானை அரோஹர கோஷமிட்டு தரிசனம் செய்தனர். பின்னர் சண்முகார்ச்சனை பூஜை நடந்தது. மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்