SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரே ஒரு வசனம், பத்துக் கட்டளைகள்!

2017-10-21@ 10:31:16

திருக்குர்ஆன் இறைவனின் இறுதி வேதம். அதனுடைய ஒவ்வொரு திருவசனமும் ஆழமான, அகலமான பொருள் உடையவை. உலகம் இன்று எதிர்கொண்டுள்ள அனைத்துச் சிக்கல்களுக்கும்  திருக்குர்ஆன் போகிற போக்கில் தீர்வு சொல்லியிருக்கிறது. லஞ்சம், ஊழல், மோசடி, முறைகேடான ஆட்சி, பெண்ணுரிமை பறிப்பு, குழந்தைகள் மீதான வன்கொடுமைகள், அகதிகள் பிரச்னை என என்னென்ன குழப்பங்களால் இன்று உலகம் தத்தளிக்கிறதோ அத்தனைக்கும் குர்ஆன் தீர்வு சொல்கிறது. சில வசனங்கள் ஒரே ஒரு சட்டத்தைச் சற்று விரிவாக விளக்கும். இன்னம் சில வசனங்களில் ஏராளமான சட்டங்கள், கட்டளைகள் பொதிந்திருக்கும்.
ஒரே  வசனத்தில் பத்துக் கட்டளைகள் பொந்திருக்கும் அழகான ஒரு வசனத்தைப் பார்ப்போம். 42ஆம் அத்தியாயத்திலுள்ள 15ஆம் வசனம் இது.

(நபியே) நீர் அதே மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக. உமக்குக் கட்டளையிடப்பட்டதில் உறுதியாக இருப்பீராக. இவர்களின் மனவிருப்பங்களைப் பின்பற்றி விடாதீர். (இவர்களிடம்) கூறிவிடுவீராக: இறைவன் இறக்கியருளிய வேதத்தின்மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். உங்களிடையே நீதி செலுத்துமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அந்த இறைவன்தான் எங்களுக்கும் இறைவன்; உங்களுக்கும் இறைவன். எங்களுக்கு எங்கள் செயல்கள்; உங்களுக்கு உங்களின் செயல்கள். எங்களுக்கும் உங்களுக்கும் இடையே எந்த வம்புவழக்கும் இல்லை. இறைவன் நம் அனைவரையும் ஒன்றுதிரட்டுவான். நாம் அனைவரும் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது.” (குர்ஆன் 42: 15) இந்த ஒரே ஒரு வசனத்தில் பின்வரும் பத்துக் கட்டளைகள் பொதிந்துள்ளன:

1. இறைமார்க்கத்தின் பக்கம் மக்களை அழையுங்கள்.
2. இறைவழிபாட்டில் நிலைத்திருங்கள்.
3. இணைவைப்பாளர்களின் மனவிருப்பங்களுக்கு ஆசாபாசங்களுக்கு இணங்காதீர்கள்.
4. இறைவன் அருளிய வேதத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
5. மக்களிடையே நீதி செலுத்துங்கள்.
6. அனைத்து மக்களுக்கும் அந்த ஏகன்தான் இறைவன் ஆவான்.
7. அவரவர் வினையின் செயல்களின் பயன் அவரவருக்கே.
8. சான்றுகள் தெளிவானபின் வம்புவழக்குகள் தேவையில்லை.
9. மறுமையில் அனைவரையும் இறைவன் ஒன்று திரட்டுவான்.
10. அனைவரும் அவனிடமே போய்ச் சேர வேண்டியுள்ளது.
இந்தக் கட்டளைகளை கவனத்தில் கொண்டு செயல்பட்டால்  மண்ணுலகம் பொன்னுலகம் ஆகும்.

இந்த வார சிந்தனை


“இறைவன் தன் கட்டளையைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டுவருகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கிறான்.” (குர்ஆன் 5:16)

 சிராஜுல்ஹஸன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mukesamba_daugfes

  முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

 • glassroof_simla

  இயற்கை காட்சிகளை உள்ளிருந்து ரசிக்க வைக்கும் வகையில் ஷிம்லா-கல்கா வரை கண்ணாடி மேற்கூரை கொண்ட ரயில்!

 • bengulrguysraly

  உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பெங்களூரில் ஓரின சேர்க்கையாளர்கள் பிரைட் பேரணி!

 • Thailandmissuniverse

  தாய்லாந்தில் பிரபஞ்ச அழகிப் போட்டிகளுக்கு முன்னோடியாக ஆடை அலங்காரப் போட்டிகள் : பங்கேற்று அசத்திய அழகிகள்

 • santa_world

  மக்கள் முகங்களில் பளிச்சிடும் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி: கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து உற்சாக கொண்டாட்டம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்