SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறிவுத் தெளிவே விழிப்பு!

2017-10-17@ 10:17:09

‘‘இளைஞர்களே! நீங்கள் முதியவர்களுக்குப் பணிந்திருங்கள். ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்.’’ ஆகையால் கடவுளுடைய வல்லமை மிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள். அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்.  உங்கள் கவலைகளை எல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார். அறிவுத்தெளிவோடு விழிப்பாய் இருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ஜிக்கும் சிங்கம் போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கைக் கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்.

உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர், சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? எல்லா அருளும் நிறைந்த கடவுள் இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் நம் மாட்சியில் பங்கு கொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களை சீர்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலை நிறுத்துவார். அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது.’’ (1 பேதுரு 5:511) நமக்குக் கவலைகள் உண்டு; பிரச்னைகள் உண்டு. அவைகள் மிகப் பெரியதாக நம்மை அச்சுறுத்தும். ஆனால், அவைகளையெல்லாம் கடவுளுடைய பாதத்தில் வைக்கும்போது அவைகள் மிகச்சிறியதாக ஆகிவிடும். ஏன் துன்பத்தில் மடிந்து போகிறோம்? ஏன் கவலைகளால் ஏக்கம் கொள்கிறோம்?

நமது மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்போம். நமக்கு ஒரு கஷ்டமும் நேரிடாது. எந்த ஒரு செயலிலும் குறை ஏதாவது தோன்றும். குறை இல்லாது போனாலும் குறை கண்டுபிடிக்க  சில பேர் இருப்பார்கள். காதில் விழுகிற கசப்பான வார்த்தைகளைப் பற்றிக் கவலைப்படாமலிருப்பதும், தற்புகழ்ச்சி பேசுபவர்களின் சொல்லுக்குச் செவி கொடாதிருப்பதும் நலம் பயக்கும். செல்கின்ற வழியில் தடையின்றி நடக்க இதுவே உதவும். எந்தவொரு இடத்திலும் யாராவதொரு எதிராளி இருப்பான். எல்லா இடத்திலும் எல்லாரும் நல்லவர்களாக, நலம் நாளும் சமாதான விரும்பிகளாக இருப்பதில்லை. எவரொருவர் நம்மைப் பற்றிய தீய எண்ணம் கொண்டாலும், நம்மைக் கவலைக்குள்ளாக்கும் பேச்சுக்களை பேசினாலும் அதனால் வருத்தப்படாமலிருப்போம்.

நாம் உண்மையாகவே பொறுமையுள்ள பணிவான வாழ்வு வாழ்கிறோமெனில் பறந்து போகிற வார்த்தைகளைப் பற்றி சிறிதேனும் கவலை கொள்ளாதிருப்போம். போராட்டமிக்க காலத்தில் நாம் அமைதியாய் இருந்து உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி மற்றவர் சொல்வதைப் பற்றிப் பெரியதாய்க் கொள்ளாமல் நாம் சமாதானத்தின் வழியே செல்வோம். நாம் நல்லவனென்றும் கெட்டவனென்றும் மற்றவர் பேசினாலும் நாம் வேறு மனிதராகப் போவதில்லை. நமக்குப் புதிய முகமும் மனமும் பொருத்தப்படப் போவது இல்லை. மெய்யான சமாதானமும் மெய்யான மகிமையும் நம்மிடமல்லவா நிறைந்திருக்கின்றன. அவ்வாறு  இருக்கையில் நாம் ஏன் கலங்க வேண்டும்?‘‘தீமையைப் பகையுங்கள். நன்மையை விரும்புங்கள். ஊர் சபையில் நீதியை நிலை நாட்டுங்கள். நீதி தண்ணீரைப்போல வழிந்தோடட்டும். நேர்மை நீரோடைபோலப் பாயட்டும்.’’  (ஆமோஸ் 5:15, 24)

‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mukesamba_daugfes

  முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

 • glassroof_simla

  இயற்கை காட்சிகளை உள்ளிருந்து ரசிக்க வைக்கும் வகையில் ஷிம்லா-கல்கா வரை கண்ணாடி மேற்கூரை கொண்ட ரயில்!

 • bengulrguysraly

  உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பெங்களூரில் ஓரின சேர்க்கையாளர்கள் பிரைட் பேரணி!

 • Thailandmissuniverse

  தாய்லாந்தில் பிரபஞ்ச அழகிப் போட்டிகளுக்கு முன்னோடியாக ஆடை அலங்காரப் போட்டிகள் : பங்கேற்று அசத்திய அழகிகள்

 • santa_world

  மக்கள் முகங்களில் பளிச்சிடும் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி: கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து உற்சாக கொண்டாட்டம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்