SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் நூற்றாண்டு நிறைவு விழா திருவுருவ பவனி

2017-10-16@ 12:05:18

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், நூற்றாண்டு நிறைவு விழா  திருவுருவ பவனி நடந்தது. கிருஷ்ணகிரியில் உள்ள தூய பாத்திய அன்னை ஆலயத்தில், நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, கடந்த ஒரு வாரமாக திருத்தலத்தை சுற்றி மெழுகுவர்த்தி ஏந்தியவாறு திருவுருவ பவனி நிகழ்ச்சி நடந்தது. இறுதி நாளான நேற்றுமுன்தினம் மாலை, தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், நூற்றாண்டு விழா திருப்பலியுடன் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு அன்னையின் திருவுருவ பவனி நிகழ்ச்சி நடந்தது.

இதில் கிருஷ்ணகிரி மறைவட்ட குருக்கள், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, மரியன்னை மாநாடு நடந்தது. இதில் சேலம் மறை மாவட்ட ஆயல் சிங்கரான் பங்கேற்று, மாநாட்டின் திருப்பலி வாசித்தார். நிறைவு விழா நிகழ்ச்சியையொட்டி, ஆலய வளாகத்தில் கடந்த 13ம் தேதி தொடங்கிய அன்னை மரியாவின் புகைப்பட கண்காட்சி, நேற்று (15ம் தேதி) முடிந்தது.
இந்த கண்காட்சியை ஏராளமானோர் பார்த்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • anniversary

    நகராட்சி அமைப்பு தொடங்கப்பட்டதன் 50வது ஆண்டு விழா கொண்டாட்டம் : வெங்கையா நாயுடு, ஆளுநர் பங்கேற்பு

  • Britain_Rain

    பிரிட்டனில் பலத்த காற்றுடன் மழை: சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதி

  • 23-11-2017

    23-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்