SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு

2017-10-13@ 13:00:59

தர்மபுரி: தேய்பிறை அஷ்டமியையொட்டி அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், 3 மாநில பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் நேற்று அஷ்டமி பெருவிழா நடந்தது. விழாவையொட்டி காலை 6 மணி முதல் அஷ்ட பைரவர் யாகம், அஷ்டலட்சுமி யாகம், தனாகர்சன குபேர யாகம், அதிருத்ர யாகம் நடந்தது.

காலை 10 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து 64 வகையான அபிஷேகம், 1008 அர்ச்சனைகள், வேத பாராயணம், சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 10 மணிக்கு குருதி யாகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் தீபம் ஏற்றி வழிபட்டனர். விழாவையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சரவணன், பக்தர்கள் சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2017

    24-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்