SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

பொங்கலில் இத்தனை வகைகளா?

2013-12-11@ 16:00:48

தலையாயது தைப்பொங்கல்

தமிழர் பண்பாட்டின் அடையாளமாக திகழ்வது தைப்பொங்கல். ஆனால், தமிழர்கள் வாழ்வில் பொங்கலுக்கு எத்தனையோ அர்த்தங்கள் உள்ளன.
பசியும் பிணியும் அகன்ற உலகமே தமிழர்களின் அரசியல் கோட்பாடு. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இதையே உணர்த்தி நிற்கின்றன. தமிழ்கூ றும் நல்லுலகின் முதன்மை தொழிலான உழவை ஒட்டியே பிற தொழில்கள் சுழல்வதால் அது சார்ந்த விழாக்களே அவர்தம் வாழ்வில் அதிகம்  இடம்பிடித்தன. சுற்றந்தழாலும், விருந்தோம்பலும் இல்வாழ்வின் இன்றியமையா அம்சங்களானதால் சித்ரா பவுர்ணமி விழாவாகட்டும், சிறு வீட்டு பொங் கலாகட்டும் அனைத்திலும் விருந்தே முதலிடம் பிடித்தது.

அன்றாட வாழ்வில் அடுப்புகளில் உணவு பொங்குகிறது. ஆனால், அது திருவிழாக்களிலும், கோயில்களிலும் பொங்கும்போது தான் பொங்கலாகிறது.  பச்சரிசியும் பாலும் ஊற்றி செய்யப்படும் பொங்கல் இல்லுறை தெய்வங்களுக்கும், நடுகற்களாக நின்றுவிட்ட ஊர்க்காவல் தெய்வங்களுக்கும் படைக்கப்ப டுகிறது.

கரும்பிலிருந்து சாறு பிழிந்து சர்க்கரை செய்யும் தொழிலை அறிந்ததும் ஊராருக்கு வழங்க சர்க்கரை பொங்கல் செய்தனர். எந்தவித பொங்கலாக இருந்தாலும்
அதை கொண்டாடுவதில் சில நடைமுறைகளை தமிழர்கள் கடைபிடித்தனர். அறுவடை காலமானதால் சாகுபடிக்கு முன்பு நீரோடியதால் சிறுமணல் படிந்த ஓடையிலிருந்து மணலை எடுத்து வந்து முற்றத்திலோ, கோயில் வளாகத்திலோ குவிக்க வேண்டும்.

அதன்மீது சிற்றுயிர்கள் உண்ணத்தகுந்த பச்சரிசி உள்ளிட்ட தானிய மாவுகளால் ஆன மாக்கோலம் போடவேண்டும். அதன்மீது வாழை இலை விரித்து நறுமணம் கமழும் சந்தனம், கற்பூரம் உள்ளிட்ட பொருட்களையும், வெற்றிலை, மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட் களையும் பரப்பவேண்டும். தேங்காயும் வாழைப்பழமும் தமிழர்களின் படையலில் அவசியம் இருக்கும் விளைபொருட்கள். தைப்பொங்கலென்றால் மற்ற  வகை காய், கனிகளும் படைக்கப்படும். இத்தகைய
படைப்பிற்கு பிறகு முதிய மங்கல மங்கையர்கள் நெருப்பு மூட்ட பொங்கல் பொங்குகிறது. பொங்கல் பொங்கும் போது குலவையிடுவது  மரபு. தமிழர்கள் சாமிக்கு படைத்த பொருட்களை தாங்கள் பயன்படுத்துவதன் மூலம் பிற்காலத்தில் எழுந்த ‘நாமே கடவுள்’ தத்துவத்துக்கு முன்னோ டியாக விளங்குகின்றனர்.

பொங்கலிட பல காரணங்கள் உள்ளன. வெம்மை நோய்களான அம்மை நோயை போக்க அம்மன் கோயில் முன்பு பொங்க லிடுகின்றனர். மழை வேண்டி இந்திர விழா எடுத்து கடற்கரைகளிலும், தலை நகரங்களிலும் பொங்கலிட்டுள்ளனர். பசி போக்கும் பயிர்வளர்த்து உயிர் காக்க உணவு படைக்கும் உழவர்களின் ஒட்டுமொத்த வாழ்வில் தைப்பொங்கலே தலையாய நாளாக அமைகிறது.  அன்று புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கும் பொங்கல் அவர்கள் புது வாழ்வின் தொடக்கமாக இருக்கிறது. இது மட்டும் தான் எந்தவித சமய சம்பந்தமும் இல்லாத கலாச்சார விழாவாக கொண்டாடப்படுகிறது. மானிடர் யாவரும் பசியின்றி
வாழ்க. உழைக்கும்  உயிர்கள் உன்னதம் பெறுக. நன்றியும் அன்பும் நற்பண்பும் பெருகுக.

பெரியோர் சொல் கேட்டு பிழையின்றி வளர்க. இவை தான் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் ஆகிய பொங்கல் நிகழ்ச்சிகள் கற்றுத்தரும் பண்பாட்டு பாடங்களாக உள்ளன. உணவை படைத்தலும் பகிர்தலும் பசியறுக்கும் முறை. மருந்தையே உணவாக கண்டுபிடித்து பிணி அகற்றும் முறை. இதுவே தமிழர்களின் பொங்கல்  விழாவில் பொதுப்படை.

‘பறவை’ பொங்கல்

உழைத்த மாட்டுக்கு மட்டுமின்றி ஊர் சுற்றும் காக்கை, குருவிகளுக்கும் பொங்கல் உண்டு. கணுப்பொங்கலன்று வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், செம்பொங்கல், மஞ்சள் பொங்கல், தயிர் பொங்கல் உள்ளிட்ட 6 வகை பொங்கல் சோற்றை ஆற்றங்கரையிலும் வீட்டு மொட்டை மாடியிலும்  பெண்கள் படைத்து உடன்பிறந்த சகோதரர்கள் நலனுக்காக வேண்டிக் கொள்வதுண்டு.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-03-2019

  19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mylai_kabal1

  பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

 • parade_eye1

  புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

 • newattack

  நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

 • siva_muthu12

  காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்