SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

2017-10-12@ 11:46:37

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் புரட்டாசி பொங்கல் விழாவையொட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா கடந்த 4ம் தேதி துவங்கியது. தினமும் நாதஸ்வர இன்னிச்சை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் முத்தாலம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று நள்ளிரவு 1.45 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்தாலம்மன் எழுந்தருளினார். 2.30 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். எஸ்பி ராஜராஜன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி சங்கரேஸ்வரன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தெருக்களில் தேர் வலம் வரும் போது, பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சேடக்குடி தெரு, வணிக வைசியர் தெரு, வெள்ளாளர் நடுத்தெரு வழியாக மதியம் 1 மணிக்கு ேதர் நிலையை வந்தடைந்தது. இதனையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சுந்தர்ராஜ், முத்தாலம்மன் பக்த சபா தலைவர் சுந்தராஜ பெருமாள், செயலர் விவேகானந்தன், மூத்த மூறுப்பினர் ஹரிஹகரன் செய்திருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2017

    24-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்