SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடன்குடியில் முளைப்பாரி ஊர்வலம்

2017-10-12@ 11:45:54

உடன்குடி: உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோயில் வருடாந்திர கொடை விழா கடந்த 9ம் தேதி மாலை 6மணிக்கு சிறப்பு பூஜையுடன் துவங்கியது. இதையொட்டி அன்று இரவு 7மணிக்கு கன மழை பொழிந்து நாடு செழிக்க வேண்டி பெண்கள் நடத்தும் திருவிளக்கு பூஜை நடத்தினர். இரவு 9 மணிக்கு வில்லிசையும், நள்ளிரவு சிறப்பு பூஜையுடன் கும்பம் வீதியுலாவும் நடந்தது. 10ம் தேதி காலை 11 மணிக்கும், இரவு 9 மணிக்கும் வில்லிசையும், நண்பகல் மற்றும் நள்ளிரவு 1மணி அலங்கார பூஜையுடன் கும்பம் வீதியுலாவும் நடந்தது.

இதையொட்டி இரவு 10 மணிக்கு வாணவேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று (11ம் தேதி) காலை 9 மணிக்கு மஞ்சள் பெட்டி ஊர்வலம், காலை 10மணி, இரவு 9மணிக்கு வில்லிசை, நண்பகல் சிறப்பு பூஜையுடன் கும்பம் வீதியுலா, மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று (12ம் தேதி) காலை 6 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜையும், பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது. ஏற்பாடுகளை பெருமாள்புரம் ஊர் கமிட்டியினர் செய்திருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2018

    24-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்