SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகமே போற்றும் இந்திய ஜோதிடத்தின் மகத்துவம்

2017-10-11@ 15:15:46

ஜோதிடம் என்ற மருத்துவம் - 36

‘சாகாவரம்’ என்பது புராண காலத்திலும் சரி, இப்போதும் சரி, எப்போதும் சரி சாத்தியமில்லை என்பதே நிதர்சனமான உண்மை. குறையில்லாத மனிதன் இந்த உலகத்தில் இல்லவே இல்லை. ஏதோ ஒரு குறை, எல்லோருடைய ஜாதகத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கும். அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்தான் நமக்கு வேண்டும். இந்த மனப்பக்குவம் வந்து சேர்வதற்குத்தான் நாம் பரிகாரங்களைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை கடந்த இதழில் பார்த்தோம். இன்றைய நவீன உலகில் விபத்துகளால் மட்டுமல்லாது இயற்கையாகவே ஒருவர் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார். பேசிக்கொண்டே இருக்கும் ஒருவருடைய இதயம் திடீரென்று நின்று போகிறது.

ஐந்து நிமிடத்திற்கு முன்பு நன்றாக இருந்தவர் இந்த நிமிடத்தில் இல்லை என்றெல்லாம் கேள்விப்படுகிறோம், கண்கூடாகவும் காண்கிறோம், இவற்றிற்கெல்லாம் யார் காரணம், எந்த கிரஹத்தின் தாக்கம் இது, என்று ஆராயும்போது பொதுவாக ஜோதிடத்தில் காணும் நவகிரஹங்களோடு இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிற யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ போன்ற கிரஹங்களையும் மருத்துவ ஜோதிடர்கள்  ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே  எழுதப்பட்ட ‘பிருஹத் பராசர ஹோரா சாஸ்த்ரா’ என்ற வடமொழி நூலில் எந்தெந்த கிரஹங்கள் எந்தெந்த வகையான நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்பதை விரிவான விளக்கங்களுடன், தெளிவாகக்  குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாறு குறிப்பிடப்பட்ட பட்டியல் இது:
 
சூரியன் தரும் நோய்கள்

மூளை நரம்புகள் தொடர்பான நோய்கள், உடல் பலவீனங்கள், உடல் வறட்சி, தசை நோய்கள், அஜீரணக் கோளாறுகள், வயிற்றில் ஏற்படும் சிக்கல்கள், முகப்பருக்கள், தொண்டை பாதிப்புகள், குரல்வளை நோய்கள், தலை கிறுகிறுப்பு, மயக்கம், காய்ச்சல், பவுத்திர நோய்கள், கண் அழுத்த நோய்கள், தலைவலி, இதயத் துடிப்பு கோளாறுகள், தீவிர ரத்த சோகை நோய்கள், தட்டம்மை, பெரியம்மை, நீர்ச்சுருக்கு, முதுகெலும்பு தொடர்பான நோய்கள், பொன்னுக்கு வீங்கி, கால். கழுத்து வீக்கங்கள், கட்டிகள், கை கால் நடுக்கம்.

சந்திரன் தரும் நோய்கள்

சீழ் கட்டிகள், சருமத்தில் கொப்பளங்கள்,  ஜலதோஷம், சீதளம், வறட்டு இருமல், குரல்வளை நோய்கள், சளிப் பிரச்னைகள், நீர்சவ்வு நோய்கள், உணவுப் பாதை நோய்கள், வயிற்று உபாதைகள், குழந்தைகளின் வயிற்றில் பூச்சிகள் உண்டாதல், வயிற்றுப்போக்கு, அஜீரணம், வாந்தி எடுத்தல், குடல் அடைப்புகள், சுவாசப்
பிரச்னைகள், நுரையீரல் அடைப்புகள், இருதய வீக்கம், வலிப்பு நோய், ஒழுங்கற்ற மாதவிடாய், கருச்சிதைவு, குறை பிரசவங்கள், கர்ப்பப்பை கோளாறுகள், குறைந்த ரத்தம், ரத்தத்தட்டுகளின் அளவு  (Platelets count), ரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறை, பேன்தொல்லை, மனநிலை பாதிப்பு, கண்சவ்வுக் கோளாறுகள்.

செவ்வாய் தரும் நோய்கள்

வெட்டுக் காயங்கள், சிராய்ப்புகள், ரத்தக் கசிவு, ஊமைக்காயங்கள், சீதபேதி, ரத்த நாளங்களில் கோளாறுகள், ரத்தப் பெருக்கு, ரத்த இழப்பு, ரத்தக்கொதிப்பு (அ) ரத்த அழுத்தம், கருச்சிதைவுகளினால் இறப்பு, அதிக மாதவிடாய் வெளியேறுதல், மார்புகளில் ரோகம் மற்றும் வலிகள், ரத்தக் கட்டு, சின்னம்மை, அளவுக்கதிகமான காய்ச்சல், குளிர் ஜூரம், தோலில் கொப்புளம், சிறுநீரகக் கோளாறுகள், குடல் இறக்கம் (ஹெர்னியா), மூலம், உள்நாக்கு வளர்ச்சி, இனப்பெருக்க உறுப்புகளில் வெளிப்புற புண்கள் முதலியன. பொதுவாக ரத்தம் சம்பந்தப்பட்ட, ரத்தம் வெளிப்பட வைக்கின்ற நோய்கள்.

புதன் தரும் நோய்கள்

நரம்புத் தளர்ச்சி, வலிப்பு நோய் , கைகால் நடுக்கம், இதய நடுக்கம், அளவுக்கதிகமான ஆராய்ச்சியின் காரணமாக ஏற்படும் மூளை சம்பந்தப்பட்ட பாதிப்புகள், குடல் நோய்கள், குடல்புழுக்கள், கைகள், கால்கள், தோள்பட்டையில் உண்டாகும் சுளுக்கு, வாயு உபாதைகள், அமிலக் கோளாறுகள், உறக்கமின்மை, சிறுநீரகப் பாதையில் தடையால் உண்டாகும் பிரச்னைகள், நீர்ச்சுருக்கு, வயிற்றில் தசைப்பிடிப்பு, உறக்கமின்மை,  ஊமைத்தன்மை, குத்துவலி.

குரு தரும் நோய்கள்

கொழுப்பு சம்பந்தமான நோய்கள், செரிமானக் கோளாறுகள், பால் சுரப்பிகளின் பிரச்னைகள், விந்தணு சுரப்பிகளில் பிரச்னைகள், தசைகளில் கொழுப்பு செரிவு பிரச்னைகள், உள்ளுறுப்புகள், கல்லீரல் மற்றும் மண்ணீரல் தொடர்பான நோய்கள், மாசுபட்ட காற்றினால் உண்டாகும் நோய்கள், ரத்த சிவப்பணுக்களின் மாற்றங்கள்,ரத்தத்தில் சிகப்பணுக்கள் அதிகரிப்பது, நீர்கோப்பு, காது பிரச்னைகள், நீரிழிவு நோய், சிறுநீர் பையில் கற்கள், ஆண்களின் மலட்டுத்தன்மை போன்றவை.

சுக்ரன் தரும் நோய்கள்

பித்தக் கோளாறு, சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள், தூக்கத்தில் விந்து வெளியேறுதல், சிறுநீர் தொற்றுநோய், மார்புக்கூடு நோய்கள், விஷக் காய்ச்சல், நீரிழிவு நோய், நாளமில்லா சுரப்பிகளில் வீக்கம், வாத நோய்கள், குடல் தொல்லைகள், மூச்சுத் தொந்தரவுகள் (நாடாக்கள் இறுக்கிக் கட்டுவதாலும், இறுக்கமான உடைகள் அணிவதாலும் உண்டாவது), தரமற்ற அழகு சாதனப் பொருட்களால் ஏற்படும் பிரச்னைகள், பெண்களால் உண்டாகும் நோய்கள், தொண்டை நோய், மாறுகண் அல்லது கண்களில் குறைபாடு.

சனி தரும் நோய்கள்

கபாலத்தில் அழுத்தம், மூச்சுத்திணறல் நோய்கள், சப்பைக்கால், கைகால்களில் ஊனம் உண்டாகுதல், எலும்பு முறிவு மற்றும் வலிகள், முதுகெலும்பு வளைந்து கூன் உண்டாதல், கருவில் முறையின்மை, கருத்தரிப்பின்போது உண்டாகும் பிரச்னைகள், மூட்டு வீக்கம், வாயு பிடிப்பு, கரிய காமாலை, ஜலதோஷம், டைபாய்டு, காது மந்தம், மலச்சிக்கல், பல்நோய்கள், வாய்துர்நாற்றம், மலட்டுத் தன்மை, விஷத்தால் இதயம் பாதிக்கப்படுதல். பழங்கால ஜோதிட நூல்களில் ராகுகேது பற்றிய குறிப்பு காணப்படவில்லை.

நிழல்கிரஹங்கள் என்று வர்ணிக்கப்படும் ராகுகேதுவைத் தவிர இதர கிரஹங்கள் மனித உடலின் மீது என்னென்ன விதமான நோய்களை உண்டாக்குகின்றன என்று பிருஹத் பராசர ஹோரா சாஸ்த்ரா எனும் நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதைக் காணும்போது, பழங்காலத்திலேயே நம் நாட்டில் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

ஒருபுறம் திருமூலர் உள்ளிட்ட சித்தபுருஷர்கள் பல மருத்துவக் குறிப்புகளை இந்த உலகிற்கு தந்திருந்தாலும், ஜோதிடத்தின் மூலமாக எந்தெந்த நோய்க்கு எந்தெந்த கிரஹம் காரணமாய் இருக்கமுடியும் என்பதை அறிந்து கொள்ளும்போது பிரமிப்பாய்த்தான் உள்ளது. இந்தக் காரணிகளை இன்றைய நவீன உலகில் ஆராய்ச்சி செய்து வரும் உலகளாவிய மருத்துவ ஜோதிடர்களும் முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்திய ஜோதிட முறையின் மகத்துவத்தை எண்ணி பெருமை கொள்வோம்.

திருக்கோவிலூர்  K.B.ஹரிபிரசாத்சர்மா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gggooooverrr

  அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

 • affffgaaaaa

  ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

 • iiiiiiiiiiitaaalyyy

  இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

 • keeeraaalaaaa

  கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

 • buildingggggg1234

  சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்