SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஞ்சனூர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு

2017-10-11@ 10:39:38

திருவிடைமருதூர்: கஞ்சனூர் சுக்ர ஸ்தலமான கற்பகாம்பாள் சமேத அக்னீஸ்வரர்  கோயிலில் ஆஞ்சநேயருக்கு 50ம் ஆண்டு சந்தன காப்பு விழா தொடங்கியது. இதையடுத்து காலையில் கோயில் வாசலில் உள்ள விநாயகர் சன்னதியில் கணபதி ஹோமம் நடந்தது. பூர்ணாகுதியை தொடர்ந்து கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் நடராஜ மண்டபத்தில் உள்ள ஆஞ்சநேய சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து லட்சார்ச்சனை தொடங்கியது. கோயில் செயல் அலுவலர் சரண்யா, கண்காணிப்பாளர்  அருணாச்சலம, திமுக ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, விழா அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்றும் நாளையும் காலை மற்றும் மாலை ஆஞ்சநேய சுவாமிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. நாளை இரவு 7.30 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்தியாகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

  • hawai_volcano123

    ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்