SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடுதலை வீரர் துப்பாக்கி கவுண்டர் நினைவேந்தல் விழா

2017-10-10@ 12:55:36

சிவகங்கை: திருப்பாச்சேத்தி கிராமத்தில் விடுதலை வீரர் ஸ்ரீஉதயப்பெருமாள் என்ற துப்பாக்கி கவுண்டர் நினைவேந்தல் விழா நடந்தது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே திருப்பாச்சேத்தி கிராமத்தில் இருக்கிறது மருநோக்கும் பூங்குழலி உடைநாய திருநோக்கிய அழகிய நாதர் கோயில். இக்கோயிலில் முருகன் சன்னதியில் ஸ்ரீஉதயப்பெருமாள் என்ற துப்பாக்கி கவுண்டரின் திருவுருவச் சிலை உள்ளது. வேலுநாச்சியாரின் விசுவாசியும், மருது சகோதரர்களின் துப்பாக்கிப் படை தளபதியுமான மாவீரர் ஸ்ரீஉதயப்பெருமாள் கவுண்டர் என்ற துப்பாக்கிக் கவுண்டர்,  திருப்பாச்சேத்தியில் வெள்ளையர்களை விரட்டி அடித்தார்.

சின்ன மருதுடன், துப்பாக்கி கவுண்டர் மற்றும் சிலர் சேர்ந்து பாளையங்கோட்டை சிறைச்சாலைக் கதவுகளை வெடிகுண்டால் தகர்த்து ஊமைத்துரையின் குடும்பத்தினரைப் பாதுகாத்தனர். காளையார்கோவில் போரில் 1801ம் ஆண்டு அக்.5ல் பீரங்கிக் குண்டுகளை மார்பில் தாங்கி, ஸ்ரீஉதயப்பெருமாள் என்ற துப்பாக்கி கவுண்டர் உயிர்த்தியாகம் செய்தார். இந்தத் தினத்தை ஒட்டி திருப்பாச்சேத்தி கோயிலில் விடுதலை வீரர் துப்பாக்கி கவுண்டரின் நினைவேந்தல் விழா நடத்தப்பட்டது. இதில் கிராமத்தினருடன், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்களும் பங்கேற்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

  • karanisvararfestival

    மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்