SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

2017-10-10@ 12:54:34

தென்காசி: குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 13ம்தேதி தேதி தேரோட்டம் நடக்கிறது. பிரசித்தி பெற்ற குற்றாலநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா வெகு விமர்சையாக நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை 5.40 மணிக்கு கொடியேற்றதுடன் துவங்கியது.  கொடியை கணேசன்பட்டர், ஜெயமணிசுந்தரம்பட்டர், கண்ணன்பட்டர், மகேஷ்பட்டர் ஆகியோர் ஏற்றி வைத்தனர். ஆர்.டி.ஓ. ராஜேந்திரன், கோயில் உதவி ஆணையர் செல்வகுமாரி, முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், இலஞ்சி அன்னையாபாண்டியன், பா.ஜ. நகர தலைவர் செந்தூர்பாண்டியன், துணைத்தலைவர் திருமுருகன், கீழப்பாவூர் கண்ணன், திருக்கோவில் பணியாளர்கள் பரமசிவன், நடராஜன், கருப்பசாமி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிவனடியார்களின் சிவபூத கன வாத்தியங்களும் இசைக்கப்பட்டன.   விழாவில் தினமும் காலை மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. 12ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 13ம் தேதி காலை 8.20 மணிக்கு மேல் நான்கு தேர்கள் ஓடும் தேரோட்டம் நடக்கிறது. 15ம் தேதி காலை 9.30 மணிக்கும் மாலை 7 மணிக்கும் நடராச மூர்த்திக்கு வெள்ளை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 16ம் தேதி காலை 10.30 மணிக்கு சித்திரசபையில் நடராசமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 18ம் தேதி காலை 9 மணிக்கு மேல் விசு தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சாத்தையா, உதவி ஆணையர் செல்வகுமாரி மற்றும் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2017

    24-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்