SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாத்தான்குளத்தில் பூஞ்சப்பரத்தில் அம்மன் வீதியுலா

2017-10-10@ 12:54:01

சாத்தான்குளம்: சாத்தான்குளம்  புளியடி தேவி மாரியம்மன் கோயில் புரட்டாசி கொடை விழாவையொட்டி  பூஞ்சப்பரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. சாத்தான்குளம்  புளியடி தேவி மாரியம்மன் கோயில் புரட்டாசி கொடை விழா கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்தது. முதல்  நாள் காலை மங்கள வாத்தியம் முழங்க ரத வீதி சுற்றிவந்து கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து  செல்வவிநாயகர்,  தர்மபெருமாள், வீரஆஞ்சநேயர், நாகவல்லி தாயார், சுடலை  ஆண்டவர், மாரியம்மன், முத்தாரம்மன், துர்க்கை, அம்மன், மற்றும்  பரிவார  தெய்வங்களுக்கு பட்டு சாத்தி சிறப்பு வழிபாடு  நடந்தது.

3ம் நாள்  தர்மபெருமாள், வீரஆஞ்சநேயர், கருடாழ்வார் நாகவல்லிதாயார்,  மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அர்ச்சனை மற்றும் சிறப்பு வழிபாடு, நள்ளிரவு கருட வாகனத்தில் புளியடி தர்மபெருமாள் சுவாமி வீதியுலா நடந்தது. 5ம் நாள் காலை  யானை  முன்செல்ல  சிறுமிகள், பெண்கள் மஞ்சள் பெட்டி எடுத்து ரத வீதி சுற்றி வருதல்,  தொடர்ந்து அம்மன் மஞ்சள் நீராடுதல், அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, மகேஸ்வரி பூஜை, அன்னதானம் நடந்தது. 6ம் நாள் காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை, மாலை 6மணிக்கு சுமங்கலி  பூஜை நடந்தது.

7ம் நாள் காலை பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து புளியடி தேவி மாரியம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்து நகர்வலம் வருதல், இரவு புளியடி தேவிமாரியம்மன் சிம்ம வாகனத்தில் புஷ்ப அலங்காரத்துடன் வீதி உலா நடந்தது. 8ம்நாள் நள்ளிரவு வெற்றி  விநாயகர் ஆலயத்தில் இருந்து அக்னி சட்டி ஏந்தி வந்து பூக்குழி இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தல் நடந்தது. 9ம் நாள் இரவு மாரியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. 10ம் நாள் காலை 11 மணிக்கு  அம்மனுக்கு மஞ்சள் அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2018

    24-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்