SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடுத்திருப்பவர் மீது சினம் கொள்ளாதே

2017-10-10@ 09:52:37

ஒரு குருவிற்கு இரண்டு சீடர்கள் போட்டி போட்டுக்கொண்டு பணிவிடை செய்து வந்தார்கள். குறிப்பாக குருவின் கால்களைப் பிடித்து விடுவதில் அவர்களுக்குள் போட்டியே இருந்தது. இது குருவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் அவர்களது செயல் ஒரு அன்புத் தொல்லையாக மாறியது. எனவே, குரு அவர்களிடம் இனிமேல் இருவரும் போட்டி போட வேண்டாம். வலதுகாலை ஒருவரும், இடதுகாலை இன்னொருவரும் வைத்துக்கொண்டு பரிமாறுங்கள் என்று கூறினார். அதன்படி ஒரு சீடர் வலதுகாலை கண்ணும் கருத்துமாகப் பராமரித்தார். இடதுகாலை இன்னொரு சீடர் சிறப்பான முறையில் பராமரித்தார். ஒருமுறை குருவின் வலதுகாலுக்கு, அக்காலைச் சார்ந்த சீடர் வெந்நீரால் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சிறிது வெந்நீர் இடதுகாலில் பட்டுவிட்டது.

உடனே இடதுகாலுக்குரிய சீடருக்குக் கோபம் வந்துவிட்டது. எனவே அவர் வலதுகால் சீடரைத் திட்டினார். உடனே வலதுகால் சீடர் திருப்பித் திட்டினார். பொறுக்க முடியாத இடதுகால் சீடர் கொதிக்க கொதிக்க வெந்நீரைக் கொண்டுவந்து வலதுகாலில் ஊற்றினார். வலியால் அலறித்துடித்துக் கொண்டிருந்த குருவின் நிலைமையைப் பற்றிக் கவலைப்படாமல் பழிக்குப்பழியாக வலது காலைச் சார்ந்தவர் ஒரு பெரிய கல்லைத்தூக்கி இடதுகாலில் போட்டார். கால் முறிந்தது.
நமது பணியில் ‘நான்’, ‘எனது’ என்ற ஆணவம் கலந்துவிட்டால் அப்பணியின் விளைவு பயனற்றது மட்டுமின்றி ஆபத்தானதும் தீங்கு விளைவிப்பதும் ஆகும். நமது பணியில் தாழ்ச்சி மிளிரட்டும்.‘‘அநீதி ஒவ்வொன்றுக்காகவும் அடுத்திருப்பவர் மீது சினம் கொள்ளாதே! இறுமாப்புள்ள செயல்கள் எதையும் செய்யாதே! இறுமாப்பை ஆண்டவரும் மனிதரும் வெறுப்பர்; அநீதியை இருவரும் பழிப்பர்.

அநீதி, இறுமாப்பு, செல்வம் ஆகியவற்றால் ஆட்சி கை மாறும். புழுதியும் சாம்பலுமான மனிதர் எவ்வாறு செருக்குற முடியும்? உயிரோடு இருக்கும்போதே அவர்களது உடல் அழியத் தொடங்கும். நாள்பட்ட நோய் மருத்துவரைத் திணறடிக்கிறது; ‘‘இன்று மன்னர் நாளையோ பிணம்!’’ மனிதர் இறந்தபின் பூச்சிகள், காட்டு விலங்குகள், புழுக்களே அவர்களது உரிமைச்சொத்து ஆகின்றன.ஆண்டவரிடமிருந்து விலகிச் செல்வதே மனிதருடைய இறுமாப்பின் தொடக்கம். அவர்களின் உள்ளம் தங்களைப் படைத்தவரை விட்டு அகன்று போகின்றது. பாவமே ஆணவத்தின் தொடக்கம். அதிலே மூழ்கிப்போனவர்கள் அருவெறுப்பை உண்டாக்குகின்றனர். இதனால், ஆண்டவர் அவர்கள் மீது கேட்டறியா பேரிடர்களை வருவிப்பார். அவர்களை முழுதும் அழித்தொழிப்பார். ஆளுநர்களின் அரியணையினின்று ஆண்டவர் அவர்களை வீழ்த்துகின்றார். அவர்களுக்குப் பதிலாக பணிவுள்ளோரை அமர்த்துகிறார்.

நாடுகளின் ஆணிவேரை ஆண்டவர் அகழ்ந்தெறிகிறார். அவர்களுக்குப் பதிலாகத் தாழ்ந்தோரை நட்டு வைக்கிறார். ஆண்டவர் பிற இனத்தாரை பாழாக்குகிறார். அவர்களை அடியோடு அழிக்கிறார். அவர்களில் சிலரை அகற்றி அழித்தொழிக்கிறார். அவர்களின் நினைவை உலகினின்று துடைத்தழிக்கிறார். செருக்கு மனிதருக்கென்று படைக்கப்படவில்லை. கடுஞ்சீற்றமும் மானிடப் பிறவிக்கு உரியதல்ல.’’ (சீராக் 10:618) தீமை செய்யாதிருத்தலே நன்மைகளிலெல்லாம் முதன்மையானது. அகந்தை முன்னால் செல்லும். அவமானம் பின்னால் வரும்! கோழிகூட தண்ணீரைக் குடிக்கும்போது வானத்தை நோக்குகிறது. நமது பணியில் இறைவனே மையமாக இருக்கட்டும்! மற்றவர்மீது ஏற்படும் பரிவிரக்கமே நமது பணிக்கு உந்துதலாக இருக்கட்டும்!

‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Dinakaran_Education_Expo

  சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

 • mald123

  உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

 • Marijuana420Festival

  போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

 • milkcenterchennai

  சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

 • 21-04-2018

  21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்