SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரமோற்சவ நிறைவு விழா : பெரிய பெருமாளுக்கு 108 மலர் புஷ்பயாகம்

2017-10-07@ 11:57:56

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியபெருமாள் சன்னதியில், பிரமோற்சவ விழா நிறைவாக, 108 மலர்களால் புஷ்பயாக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள பெரியபெருமாள் சன்னதியில், கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்கியது. அன்று முதல் தினமும் பெரியபெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகியோர் பல்வேறு அலங்காரங்களில் வீதியுலா வந்தனர். செப்புத்தேரோட்டம், தீர்த்தவாரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

விழா நிறைவாக பெரியபெருமாள் பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகியோருக்கு 108 மலர்களால் புஷ்பயாகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக துளசி, மல்லிகை, விருட்சி, சம்மங்கி, கேந்தி, ரோஜா என 108 மலர்களை, பெரியபெருமாள் சன்னதியில் உள்ள பகல் பத்து மண்டபத்தில் பரப்பி வைத்திருந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெரிய பெருமாளை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி ராமராஜா சிறப்பாக செய்திருந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

  • hawai_volcano123

    ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்