SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சத்துவாச்சாரி செல்வகணபதி கோயிலில் 12ம் ஆண்டு விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்

2017-10-03@ 15:37:18

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம மண்டலிகள் சார்பில் சத்துவாச்சாரி பகுதி 2 செல்வகணபதி கோயிலில் 12ம் ஆண்டு விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நேற்று நடந்தது. கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி சன்னதியில் காலை 6 மணியளவில் சுப்ரபாத சேவையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து காலை 6.30 மணியளவில் விக்னேஸ்வர பூஜையும் காலை 6.45 மணியளவில் சங்கல்பமும் நடந்தது. தொடர்ந்து காலை 7.30 மணியளவில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் தொடங்கி நடந்தது.

11 மணியளவில் புஷ்பாஞ்சலியும், 11.15 மணியளவில் கோவிந்தநாம நாமாவளியும் நடந்தது. தொடர்ந்து 11.45 மணியளவில் மந்திர புஷ்பம், ஆரத்தி நடந்தது. மதியம் 12 மணியளவில் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக வனஜா, மாலதி, பிருந்தா, ராஜேஸ்வரி, சுகந்தி, கீதா பிரசாத் ஆகியோர் இறைவணக்கம் பாடினர். நிகழ்ச்சிக்கு தலைவர் ஏ.சத்தியமூர்த்தி, கே.எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினர். கே.எஸ்.ஜானகிராமன் முன்னிலை வகித்தார். இதில் வழக்கறிஞர் வரதன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ராஜகோபால், குருமூர்த்தி, ஜெயகுமார், ஸ்ரீதர், புவனேஸ்வரி, மீனாட்சி, விஷ்ணு சஹஸ்ரநாம மண்டலியினர் உட்பட 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். வி.சுப்பிரமணி நன்றி கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2017

    24-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்