SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவராத்திரியையொட்டி அம்மனுக்கு சரஸ்வதி தேவி அலங்காரம்

2017-09-23@ 12:40:35

சித்தூர்: காணிப்பாக்கம் விநாயகர் கோயில் வளாகத்தில் நவராத்திரியையொட்டி அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள அம்மனுக்கு ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி 10 நாட்கள் உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு 10 நாட்கள் நவராத்திரி உற்சவம் நேற்றுமுன்தினம் தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாளையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது. பின்னர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, மாலை அம்மனுக்கு சரஸ்வதி தேவி அலங்காரம் செய்யப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நவராத்திரி உற்சவத்தையொட்டி கோயில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2017

    24-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்