SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரிமளம் அருகே அம்மன் கோயிலில் மஹாசண்டி யாகம்

2017-09-19@ 12:16:16

திருமயம்: அரிமளம் அருகே நடைபெற்ற மஹாசண்டி யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கீழப்பனையூர் காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் மஹாசண்டி யாகம் நடத்தப்பட்டது. இதற்காக கோயில்முன் யாகசாலைகள் அமைக்கப்பட்டு, தஞ்சையை சேர்ந்த கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரிகள் தலைமையில் மஹாசண்டியாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மக்களை இயற்கை பேரழிவுகளிலிருந்து காத்து, தொழில், வியாபாரம், கல்வி, விவசாயம் மற்றும் பயிர்கள் செழித்து எல்லா வளங்களும் பெற வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-12-2018

    19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்