SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவிகாபுரத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் பங்கேற்பு

2017-09-18@ 14:26:24

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பொன்மலைநாதர் உடனுறை பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவாசக முற்றோதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மாணிக்க வாசகரின் திருவாசக முற்றோதல் விழா  நேற்று முன்தினம் மாலை அன்னை சிவகாமி உடனாய நடராஜபெருமான் மற்றும், மாணிக்க வாசக சுவாமிகள் திருவீதி உலாவுடன் தொடங்கியது. இரவு  பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று காலை ஆலய வளாகத்தின் முன்பு காலை 7 மணிக்கு திருக்கழுக்குன்றம் சதாசிவ பரப்பிரம்ம  சிவனடியார் திருக்கூட திருவாசக சித்தர் தாமோதரன் குழுவினரால் 51 பதிகம் கொண்ட 658 திருவாசக பாடல்கள் இடைவெளியின்றி மாலை வரை தொடர்ச்சியாக ஓதப்பட்டது. இதில் ஆரணி, செய்யாறு, கண்ணமங்கலம், திருவலம், சென்னை, தேவிகாபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசகத்திற்கு மனம் உருகி பாடி இறைவனை வணங்கினர். விழா ஏற்பாடுகளை தேவிகாபுரம் சிவனடியார் திருகூட்டம், பொதுமக்கள் செய்திருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2017

    24-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • sibiraj_giftsss11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிபிராஜ் பரிசுகள் வழங்கினார்

  • halloween_12311

    நியூயார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் நாய்கள் அணிவகுப்பு திருவிழா

  • terror_12_delli

    டெல்லி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொள்ளும் ஆயுதந்தாங்கிய கவச வாகனம் நிலை நிறுத்தம்

  • aalosnai_122

    இந்தியா, பங்களாதேஷ் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்