SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இது இறைவன் தரும் மரியாதை

2017-09-13@ 15:24:42

“முதியவர்களை மதிக்காதவரும் சிறார்களை நேசிக்காதவர்களும் என்னைச் சேர்ந்தவர்கள் அல்லர்” என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறியிருக்கிறார்கள்.
வயதான பெற்றோர்களைப் பார்த்து ‘ச்சீ’ என்றுகூட கூறாதீர்கள். அவர்களிடம் கனிவாகவும் கண்ணியமாகவும் உரையாடுங்கள் என்று ஆணையிட்டுள்ளது அருள்மறை. “உன் தாய் உன்னை வேதனைக்கு மேல் வேதனையைச் சுமந்து பெற்றெடுத்தாள். ஆகவே தாயுடன் நல்லமுறையில் நடந்துகொள்” என்கிறது குர்ஆன்.“தந்தையின் விருப்பத்தில் இறைவனின் விருப்பம் உள்ளது” என்று நபிகளார் கூறியிருக்கிறார்கள். பெற்றோர்களுக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும் உரியமரியாதை அளித்து, அவர்களின் உரிமையைப் பேணி நடந்து கொள்ள வேண்டும் என்பதி  இஸ்லாமிய வாழ்வியலின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும்.  மனிதனின் ஆயுள் குறித்து ஓர் அழகான நபிமொழியைப் படித்தேன்.  மனித ஆயுளுக்கு இறைவன் தரும் மதிப்பையும் மரியாதையையும் படித்தபோது இதயம் சிலிர்த்தது. (இது பலவீனமான நபிமொழி என்று சொல்லப்படுகிறது. ஆயினும் இப்னு கசீர் எனும் புகழ்பெற்ற விரிவுரை நூலில் இடம்பெற்றுள்ளது)

ஒரு முஸ்லிம் நாற்பது வயதை அடைந்து விட்டால் அவனுடைய கேள்விக் கணக்கு விசாரணையை இறைவன் எளிதாக்கிவிடுவான்.

ஒருவர் அறுபது வயதை அடைந்துவிட்டால் தன் பக்கம்  மீளுகின்ற (தன் பக்கமே சார்ந்திருக்கின்ற) அருட்பேற்றை வல்ல இறைவன் அவனுக்கு வழங்குகிறான்.

ஒருவர் எழுபது வயதை அடைந்துவிட்டால் வானத்திலுள்ள வானவர்கள் அனைவரும் அவர் மீது நேசம் கொள்கிறார்கள்.

ஒருவர் எண்பது வயதை அடைந்துவிட்டால் அவர் செய்த நன்மைகளை இறைவன் உறுதிப்படுத்துகிறான்; அவர் செய்த தீமைகளை அழித்துவிடுகிறான்.

ஒருவர் தொண்ணூறு வயதை அடைந்துவிட்டால் அவர் தம் குடும்பத்தினருக்காகச் செய்யும் பரிந்துரைகளை இறைவன் ஏற்றுக்கொள்கிறான். அதுமட்டுமல்ல, “இந்த அடியார் என்னுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு இந்த பூமியில் ஒரு சிறைக்கைதியைப் போல் வாழ்ந்தார், அவ்வாறே பதிவேட்டிலும் குறித்துக் கொள்ளுங்கள்” என்று அவரைப் பற்றி வானவர்களிடம் இறைவன் பெருமையாகப் பேசுவான். வயதில் மூத்தவர்களுக்கு இறைவனே இவ்வளவு மரியாதை அளிக்கின்றான். நாமும் பெரியவர்களை மதித்து நடப்போம். அவர்கள் மீது அன்பைப் பொழிவோம். முடியாவிட்டால்  குறைந்தது “யோவ் பெரிசு” என்பது போன்ற சொல்லாடல்களையும், “வயசான காலத்துல போய்த் தொலையாம ஏன் உசிரை எடுக்கற?” என எரிந்து விழுவதையும்  தவிர்க்கலாம்தானே.

இந்த வார சிந்தனை

நீங்கள் இறைஞ்சிய வண்ணம் இருங்கள்: “என் இறைவனே, சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும் பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறு இவர்கள் மீது கருணைபுரிவாயாக.” (குர்ஆன் 17:24)

சிராஜுல்ஹஸன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2017

    20-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்