SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காணிப்பாக்கத்தில் 17வது நாள் பிரமோற்சவம் : காமதேனு வாகனத்தில் விநாயகர் வீதி உலா

2017-09-13@ 12:15:04

சித்தூர்: காணிப்பாக்கம் கோயில் பிரமோற்சவத்தின் 17வது நாளில் காமதேனு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சித்தூர் அடுத்த காணிப்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கியது. நாளையுடன் பிரமோற்சவம் நிறைவடைகிறது.

பிரமோற்சவத்தின் 16வது நாளான நேற்றுமுன்தினம் கல்ப விருட்ச வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 17வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது.
இரவு காமதேனு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வீதி உலாவில் பக்தர்கள் கோலாட்டம் ஆடியபடி பங்கேற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sushmafrancepm

    பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

  • coolingtowersflorida

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

  • taiwaneseminimodels

    தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

  • tentsforchildrenstexas

    அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

  • PresidentGreeceleaders

    அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ் பயணம்: முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்